நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்த கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்த நிஷாந்த ஜயவீர ஆகியோர் இன்று திங்கட்கிழமை (13) காலை நிதி அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றனர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, அமைச்சுப் பதவியை வகிப்பது ஒரு சலுகையாக கருதுவது வரலாற்றின் இணைந்துள்ள ஒரு கருத்து என்றும், அது உண்மையில் ஒரு சலுகை அன்றி மாறாக ஒரு பொறுப்பு என்றும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கருத்துத் தெரிவித்த பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர, கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கையை மீட்டெடுப்பதற்கு பங்களித்த அதிகாரிகள் நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி எடுத்துச் செல்வதில் தொடர்ந்து ஆதரவளிப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் அமைச்சின் அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM