எம்மில் சிலருக்கு முகம், தாடை, பல் போன்ற உறுப்புகளில் நாள்பட்ட வலி பாதிப்பு இருக்கும். ஆனால் இதனை அவர்கள் வேறு ஒரு பாதிப்புடன் இணைத்து அதற்குரிய நிவாரண சிகிச்சையைப் பெற்றிருப்பார்கள்.
ஆனால் இது போன்ற உறுப்புகளில் நாள்பட்ட வலி பாதிப்பு இருந்தால்... அதனை மருத்துவ மொழியில் ஓறோஃபேசியல் ஃபெய்ன் என குறிப்பிடப்பட்டு, இதற்கு முழுமையான நிவாரண சிகிச்சையை பெற வேண்டும் என வைத்தியர்கள் வலியுறுத்துகிறார்கள். மேலும் இது தொடர்பான விழிப்புணர்வை மக்கள் இன்னும் பெறவில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஒறோஃபேசியல் பெய்ன் என்பதை பொதுவாக விவரிக்க வேண்டும் என்றால்... வாய் மற்றும் முகத்தில் ஏற்படும் நாள்பட்ட வலி என குறிப்பிடலாம்.
பற்கள், ஈறுகள், தாடை, மியுகோஸ், உமிழ்நீர் சுரப்பிகள் போன்ற பற்கள் தொடர்பான பிரச்சனைகள், தசை வலி, ஸ்கெலிட்டல் பெய்ன், நரம்பு மண்டல வலி, இரத்த நாளங்கள் தொடர்பான வலி, டெர்மோமான்டிபுலர் ஜாயின்ட் பெய்ன் எனப்படும் தாடை இணைப்பு வலி என பல்வேறு காரணங்களால் வாய் மற்றும் முகத்தில் நாள்பட்ட வலி பாதிப்பு ஏற்படக்கூடும்.
வலி எங்கு ஏற்படுகிறது என்பதையும், அந்த வலி மூன்று மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து இருக்கிறது என்பதையும் துல்லியமாக அவதானித்த பிறகு, வைத்தியர்களிடம் சென்று அவர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.
இதற்கு வாய் மற்றும் முகம் தொடர்பான பிரத்யேக சத்திர சிகிச்சை நிபுணரிடம் கலந்து ஆலோசித்து, அவர்கள் பரிந்துரைக்கும் நிவாரண சிகிச்சையை முழுமையாக பெற வேண்டும்.
வைத்தியர் சரவணன் தொகுப்பு அனுஷா
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM