விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த கீர்த்தி சுரேஷ்

13 Oct, 2025 | 01:57 PM
image

தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமான தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தில் அவருடன் சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை வென்ற நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் தொடக்க விழா ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

தெலுங்கு இயக்குநர் ரவி கிரண் கோலா இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா - கீர்த்தி சுரேஷ் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

கிராமிய பின்னணியிலான எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் சிரீஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இப்படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் தொடக்க விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. அந்த தருணத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி பிரபலங்களான தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த் - நிரஞ்சன் ரெட்டி, இயக்குநர் ஹனு ராகவ புடி ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றி படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். 

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் 16ஆம் திகதி முதல் ஹைதராபாத்தில் தொடங்குகிறது என்றும், அடுத்த ஆண்டின் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது என்றும் படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்