செல்வ நிலையை மேம்படுத்திக் கொள்வதற்கான சூட்சம வழிபாடு..!?

13 Oct, 2025 | 01:46 PM
image

யாரையும் ஏமாற்ற கூடாது... யார் மீதும் புறம் கூறக்கூடாது... என்ற அற சிந்தனை மிக்க கொள்கையுடன் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இந்த நேர் நிலையான எண்ணத்தின் அதிர்வின் காரணமாக அவர்கள் செல்வ நிலையில் உயர தொடங்குவார்கள்.

ஆனால் சில தருணங்களில் மறைமுகமான எதிர்மறை ஆற்றலால் தாக்கப்பட்டு , செல்வ நிலையில் பாதிப்பு உண்டாகும். இந்நிலையில் உங்களுடைய செல்வ நிலையில் மாற்றம் ஏற்படாமல் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என விரும்பினால், அதற்கும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் ஒரு சூட்சமமான வழிபாட்டை முன்மொழிந்திருக்கிறார்கள்.

இதற்கு தேவையான பொருட்கள் : ஒரு வெள்ளி குடம் அல்லது தாமிர குடம் , ஐந்து மாவிலை, ஒரு தேங்காய், மஞ்சள், குங்குமம்.

மகாலட்சுமிக்கும், குபேரருக்கும் உரித்தான வெள்ளிக்கிழமையை தெரிவு செய்து கொள்ளுங்கள். அன்றைய தினத்தில் காலையில் ஒரு வெள்ளியாலான குடம் அல்லது தாமிரத்தினால் செய்யப்பட்ட சிறிய அளவிலான குடம் ஒன்றை வாங்கி, அதில் நீரை நிரப்பி, அதன் மீது ஐந்து மாவிலைகளை வைத்து, அதன் மேல் தேங்காயை வைக்க வேண்டும்.

இது தற்போது குபேர கலசம் என போற்றப்படுகிறது. இந்த குபேர கலசத்தினை உருவாக்கி உங்களது பூஜை அறையில் வைத்து,' ஓம் மகாலட்சுமியாய நமஹ' என்ற மந்திரத்தை 108 முறை ஒரு முகமான மனதுடன் உச்சரித்து, 'செல்வ நிலையில் மேம்பாடு வேண்டும் 'என பிரார்த்திக்க வேண்டும்.

சிலருக்கு ஒரு முறை செய்தாலே பலன் கிடைக்க தொடங்கும். ஆனால் இதனை தொடர்ந்து 48 வெள்ளிக்கிழமைகளில் மேற்கொண்டு நிறைவு செய்தால் செல்வ நிலையில்  எதிர்பாராத அளவிற்கு ஏற்றம் கிடைத்து, பொருளாதார நிலையில் முன்னேற்றம் காண்பீர்கள்.

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தொழிலில் தடைகளை அகற்றி வெற்றி பெறுவதற்கான...

2025-11-14 17:37:55
news-image

வேலை வாய்ப்பு கிடைப்பதற்கான சூட்சமமான வழிமுறை..!?

2025-11-13 12:20:01
news-image

தங்க நகையை வாங்கியவுடன் அணியலாமா...?

2025-11-12 16:04:31
news-image

தீய பழக்கங்களை கைவிடுவதற்கான சூட்சும குறிப்பு..!

2025-11-11 17:44:15
news-image

தன வரவை மேம்படுத்துவதற்கான பிரத்யேக வழிபாடு..!

2025-11-10 18:48:53
news-image

பிறவி கர்மாவை கழிப்பதற்கான சூட்சம குறிப்பு..!?

2025-11-08 18:14:04
news-image

இல்லங்களில் தன வரவு அதிகரிப்பதற்கான சூட்சம...

2025-11-07 17:21:54
news-image

கடன் சுமையை குறைப்பதற்கான பிரத்யேக வழிபாடு

2025-11-06 16:54:52
news-image

செல்வ வளம் மேம்படுவதற்கான பிரத்யேக வழிபாடு

2025-11-04 18:22:32
news-image

ராஜயோகத்தை அள்ளித்தரும் பிரத்யேக வழிபாடு

2025-11-03 17:27:01
news-image

2025 நவம்பர் மாத ராசி பலன்கள்

2025-11-02 10:17:00
news-image

வறுமையை நீக்கி செல்வ வளத்தை உண்டாக்கும்...

2025-11-01 15:17:56