சரத்குமார் - சண்முக பாண்டியன் இணைந்து மிரட்டும் 'கொம்பு சீவி' படத்தின் டீசர்

13 Oct, 2025 | 01:41 PM
image

தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகர்களாக அறியப்படும் சரத்குமார் -  சண்முக பாண்டியன் விஜயகாந்த் இணைந்து நடித்திருக்கும் 'கொம்பு சீவி' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் பொன். ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கொம்பு சீவி' எனும் திரைப்படத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த், தரணிகா, கு. ஞானசம்பந்தம், ஜார்ஜ் மரியான், முனீஸ்காந்த், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கிராமிய பின்னணியிலான எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டார் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் முகேஷ் த. செல்லையா தயாரித்திருக்கிறார்.‌

அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதில் சரத்குமார் - சண்முக பாண்டியன், நாட்டு வெடிகுண்டு தயாரிப்பவர்களாக காட்சிப்படுத்தப்பட்டிருப்பதால்... எக்சன் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இந்த படைப்பு இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்