“நான் போர்களை நிறுத்துவதில் வல்லவன் ; இது நான் தீர்த்துவைக்கும் எட்டாவது போர் ; அடுத்து ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் போரையும் நிறுத்துவேன்” - ட்ரம்ப் பெருமிதம்

Published By: Nanthini

13 Oct, 2025 | 02:00 PM
image

“இஸ்ரேல் - காசா போர் முடிவுக்கு வந்துள்ளது. இது நான் தீர்த்துவைக்கும் எட்டாவது போராக உள்ளது” எனத் தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “நான் போர்களைத் தீர்ப்பதில் வல்லவன்” என்றும் கூறியிருக்கிறார். 

இதுவரை எட்டு போர்களை நிறுத்தியதாக கூறும் ட்ரம்ப், அடுத்து, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் இறங்கவுள்ளதாகக் குறிப்பிட்டார். 

காசா போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பினால் சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதற்காக ட்ரம்ப் இஸ்ரேலுக்கு பயணித்தபோது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர், “இஸ்ரேல் - காசா போர் ஓய்ந்துவிட்டது. இனி எல்லாம் இயல்பாக இருக்குமென நான் நம்புகிறேன். 

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே அமைதி ஏற்படுவதில் கட்டாரின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் முயற்சிகளும் பாராட்டுக்குரியது. 

தற்போது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே போர் இடம்பெற்று வருவதாகவும் கேள்விப்பட்டேன். 

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்கு தலிபான் படைகள் பதிலளித்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே தாக்குதல்களும் பதற்றங்களும் அதிகரித்து வருகின்றன” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ட்ரம்ப், “நான் அமெரிக்கா திரும்பியதும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போரையும் தீர்த்துவைப்பேன். ஏனென்றால், நான் போர்களை தீர்ப்பதில் வல்லவன்” என்றார். 

இஸ்ரேல் பயணித்த ட்ரம்ப், இஸ்ரேல் நாட்டின் பிரதமர் நெதன்யாகுவை சந்திப்பதோடு, அந்நாட்டு பாராளுமன்றத்திலும் உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இஸ்ரேல் பயணத்தை நிறைவு செய்ததையடுத்து, ட்ரம்ப் எகிப்துக்குச் செல்லவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பனோரமா ஆவணப்பட சர்ச்சை: பிபிசி பணிப்பாளர்...

2025-11-10 11:20:06
news-image

பிலிப்பைன்ஸில் பங்-வோங் சூறாவளி தாக்கியதில் இருவர்...

2025-11-10 11:41:39
news-image

தாய்லாந்து – மலேசிய கடற்பரப்பில் ரோஹிங்கியாக்களின்...

2025-11-10 10:05:23
news-image

ஜப்பானில் 6.7 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்...

2025-11-09 15:18:58
news-image

அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார் சிரிய ஜனாதிபதி

2025-11-09 12:20:05
news-image

தெற்கு பிரேசிலில் சூறாவளி ;  06...

2025-11-09 11:32:30
news-image

அமெரிக்காவில் 1,400க்கும் மேற்பட்ட விமான சேவைகள்...

2025-11-09 10:28:35
news-image

அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்சன் காலமானார்!

2025-11-08 15:33:48
news-image

10 நோயாளிகளை ஊசி போட்டு கொலை...

2025-11-08 14:08:37
news-image

இந்தோனேசியாவில் பாடசாலை மசூதியில் குண்டுவெடிப்பு ;...

2025-11-08 12:50:02
news-image

காணியை விற்ற பணத்தில் மருத்துவம் படிக்க...

2025-11-08 12:47:57
news-image

நான் இந்தியாவுக்குச் செல்வேன் - ட்ரம்ப்...

2025-11-07 16:00:42