அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு ; 4 பேர் பலி ; 20க்கு மேற்பட்டோர் காயம்

13 Oct, 2025 | 12:20 PM
image

அமெரிக்காவில் தெற்கு கரோலினாவில் உள்ள செயின்ட் ஹெலினா தீவுப் பகுதியில் உள்ள பார் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை (12) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்ததோடு, 20க்கு மேற்பட்டோர் காயமடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உணவு விடுதியுடனான இந்த பாரில் அதிகளவிலானோர் மது அருந்திக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவேளை சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 

இந்த தாக்குதலுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்ததாகவும் ஏனையவர்கள் பாதுகாப்பு கருதி பாரிலிருந்து வெளியேறி, அருகில் உள்ள கடைகள், கட்டடங்களுக்குள் நுழைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்குள்ளானோரின் உறவினர்களுக்கு உடனடியாக அறிவிக்கப்பட்ட அதேவேளை சுகாதார பணியாளர்கள் உடனடியாக களத்துக்குச் சென்று, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றதாகவும் குறிப்பிடப்படுகிறது. 

பாரில் பணியாற்றும் சமையற்காரர் ஒருவர், அவ்வேளை தான் நிறைய துப்பாக்கிச் சூடு சத்தங்களை கேட்டதாக தெரிவித்துள்ளார்.

எனினும், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதன் காரணம் இதுவரை வெளிப்படாத நிலையில் இது திட்டமிட்டு நடத்தப்பட்டதா அல்லது தற்செயலாக நடந்த சம்பவமா என்பதை கண்டறிய பியூபோர்ட் கவுன்ட்டி செரீப் அலுவலகம் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பனோரமா ஆவணப்பட சர்ச்சை: பிபிசி பணிப்பாளர்...

2025-11-10 11:20:06
news-image

பிலிப்பைன்ஸில் பங்-வோங் சூறாவளி தாக்கியதில் இருவர்...

2025-11-10 11:41:39
news-image

தாய்லாந்து – மலேசிய கடற்பரப்பில் ரோஹிங்கியாக்களின்...

2025-11-10 10:05:23
news-image

ஜப்பானில் 6.7 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்...

2025-11-09 15:18:58
news-image

அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார் சிரிய ஜனாதிபதி

2025-11-09 12:20:05
news-image

தெற்கு பிரேசிலில் சூறாவளி ;  06...

2025-11-09 11:32:30
news-image

அமெரிக்காவில் 1,400க்கும் மேற்பட்ட விமான சேவைகள்...

2025-11-09 10:28:35
news-image

அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்சன் காலமானார்!

2025-11-08 15:33:48
news-image

10 நோயாளிகளை ஊசி போட்டு கொலை...

2025-11-08 14:08:37
news-image

இந்தோனேசியாவில் பாடசாலை மசூதியில் குண்டுவெடிப்பு ;...

2025-11-08 12:50:02
news-image

காணியை விற்ற பணத்தில் மருத்துவம் படிக்க...

2025-11-08 12:47:57
news-image

நான் இந்தியாவுக்குச் செல்வேன் - ட்ரம்ப்...

2025-11-07 16:00:42