நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு

13 Oct, 2025 | 09:51 AM
image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்துக்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) பூநகரி மற்றும் ஹுங்கம பகுதிகளில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் பூநகரி பகுதியைச் சேர்ந்த 82 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

 பூநகரி பொலிஸ் பிரிவில் பரந்தன் பூநகரி பிரதான வீதியில் 20வது கிலோமீட்டர்  மைல்கல் அருகே வீதியில் பயணித்த ஒருவர் மீது வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

பின்னர் , விபத்தில் சிக்கிய நபர் உயிரிழந்துள்ளதோடு, விபத்துக்கு காரணமான வாகனம் நிறுத்தாமல் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தை ஏற்படுத்திய வாகன சாரதியை கைது செய்ய பூநகரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், ஹுங்கம பொலிஸ் பிரிவில் திஸ்ஸ - மாத்தறை பிரதான வீதியில் ஹங்கமவிலிருந்து தங்காலை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி எதிர் திசையில் இருந்து வந்த ஒரு கெப் ரக வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர், கெப் ரக வாகன ஓட்டுநர் மற்றும் கெப் ரக வாகனத்தில் பயணித்த பெண் ஒருவர் படுகாயமடைந்து ரன்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

இதன்போது,முச்சக்கர வண்டி ஓட்டுநர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.

 உயிரிழந்தவர் ரன்ன பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வக்பு சபைக்கான உறுப்பினர்கள் நியமனம் ;...

2026-03-10 19:09:34
news-image

2016 பின் அரச சேவையில் இணைந்த...

2026-03-10 18:45:19
news-image

அரசாங்கத்தின் முறையற்ற திட்டமிடலால் மக்கள் மீது...

2026-03-10 18:03:54
news-image

அரசாங்கம் எரிபொருள் விலை அதிகரிப்பின் ஊடாக...

2026-03-10 17:50:29
news-image

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கான...

2026-03-10 17:53:16
news-image

விமான நிலையத்தில் போதைப்பொருள் மீட்பு: கனடா...

2026-03-10 17:16:54
news-image

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியை சந்தித்தார் சுவிட்சர்லாந்து...

2026-03-10 17:20:08
news-image

இலங்கையின் தோட்டச் சமூகத்தைப் பாதுகாப்பதில் 100...

2026-03-10 16:57:59
news-image

ஈரான் கப்பல் மீதான அமெரிக்கத் தாக்குதல்:...

2026-03-10 17:26:38
news-image

ஒருங்கிணைந்த திட்டமொன்றின் ஊடாக மணல் மாபியாக்களை...

2026-03-10 16:45:54
news-image

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்பு தொடர்பான பாராளுமன்ற...

2026-03-10 16:12:56
news-image

மணல் மாபியாக்களின் செயற்பாடுகளால் மணல் விலை...

2026-03-10 16:53:06