(எம்.மனோசித்ரா)
மலையக தமிழ் மக்கள் காலம் காலமாக வாக்குகளுக்காக அரசியல்வாதிகளால் பயன்படுத்திக் கொள்ளப்பட்டார்களே தவிர அவர்களது உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் தேர்தலுக்கு முன்னதாகவே ஹட்டன் பிரடகனத்தின் ஊடாக அந்த மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே கடந்த காலங்களைப் போன்று இவற்றைக் குழப்புவதற்கு இனியும் முயற்சிக்க வேண்டாம் என எதிரணியினரிடம் கேட்டுக் கொள்வதாக பெருந்தோட்ட , சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
பண்டாரவளையில் 2056 பயனாளிகளுக்கு இந்திய வீட்டுத்திட்டத்தின் வீட்டுறுதிக்கான ஆவணத்தை வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (12) வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மலையக மக்கள் இருநூறு ஆண்டுகளாக நாட்டின் பொருளாதாரத்தின் அச்சாணியாக திகழ்கின்றனர். நாட்டில் பல வைத்தியர்களையும் தொழில் வல்லுனர்களையும் உருவாக்கிய அவர்களுக்கு இலவச கல்வி கூட மறுக்கப்பட்டது. வாக்குகளுக்காக அரசியல்வாதிகளால் அந்த மக்கள் பயன்படுத்திக் கொள்ளப்பட்டார்களே தவிர அவர்களது உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலைமையில் கடந்த ஆண்டு உலகத்திலேயே அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான சம்பவமாக இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. மக்கள் நாயகனாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மலையக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தேர்தலுக்கு முன்னதாகவே ஹட்டன் பிரகடனத்தின் ஊடாக பல்வேறு வேலை திட்டங்களை முன்மொழிந்திருந்தது. அந்த வேலைத்திட்டங்களில் மிக முக்கியமாக மலையக மக்களின் காணி உரிமம் மற்றும் வீட்டு உரிமத்தை இந்த அரசாங்கம் நிச்சயம் வழங்கும் என உறுதியளித்திருந்தோம்.
மலையக மக்களின் வரலாற்றில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவால் சிறந்த தலைமைத்துவம் வழங்கப்படுகிறது. மலையக மக்களின் சேவையை இலங்கை மாத்திரம் இன்றி முழு உலகமும் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. எமது வேலைத் திட்டங்களின் ஊடாக மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வினை வழங்கிக் கொண்டிருக்கின்றோம்.
இவ்வாறு துன்பங்களை அனுபவித்து வரும் மக்களுக்காக 10 000 வருட திட்டத்தை அறிவித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மொத்த இந்திய அரசுக்கும் எமது மக்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த இந்திய வீட்டுத்துடன் அந்த மக்களுக்கான காணி உரிமத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிச்சயம் வழங்கும் என மீண்டும் உறுதியளிக்கின்றேன்.
அதேபோன்று பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வையும் நிச்சயம் பெற்றுக் கொடுப்போம். இன்று எம்மை விமர்சிக்கும் மலையக பிரதிநிதிகள் இதுவரையும் அந்த மக்களுக்கு இழைத்த துரோகம் போதும். எனவே அபிவிருத்தியை நோக்கி பயணிக்கும் அந்த மக்கள் சமூகத்தை குழப்புவதற்கு இனியும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என அவர்களிடம் கேட்டுக் கொள்கின்றோம்.
மலையக மக்கள் மாத்திரமின்றி சகல இன மக்களுக்கும் சிறப்பான ஒரு நாட்டை நாம் உருவாக்குவோம். கடந்த ஆட்சியாளர்கள் மலையக மக்களை மறந்திருந்தாலும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவ்வாறு செயல்படாமல் அவர்களை நினைவில் இருத்தி அவர்களுக்கான தேசிய வேலை திட்டத்தை ஆரம்பித்தமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM