விடு­த­லைப்­ பு­லி­களின் இடைக்­கால அரசு என்ற கோரிக்­கையை ஏற்­றுக்­கொண்­டி­ருந்தால் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க 2005ஆம் ஆண்­டி­லேயே ஜனா­தி­ப­தி­யா­கி­யி­ருப்பார் என  சுட்­டிக்­காட்­டிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் நாட்டின் நலனை அடிப்­ப­டை­யாகக் கொண்டு அதனை நிரா­க­ரித்த  தலை­வரே பிர­தமர் என்றும் குறிப்­பிட்டார்.

கடந்த அர­சாங்­கத்தில் அமைச்­ச­ராக பதவி வகித்­தமை துர­திர்ஷ்­ட­வ­ச­மா­னது எனத் தெரி­வித்த அமைச்சர் ஹக்கீம் இரா ணுவ வெற்­றியை குருட்­டுத்­த­ன­மாக பயன்­ப­டுத்தி முன்னாள் ஆட்­சி­யா­ளர்கள் இனங்­க­ளுக்­கி­டையில் பிள­வு­க­ளையும் ஏற்­ப­டுத்த முனைந்­தனர் எனவும் கூறினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை நடை­பெற்ற  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் நாற்­ப்பதாண்டு கால பாரா­ளு­மன்ற அர­சியல் வாழ்க்கை நிறை­வை­யொட்டி வாழ்த்­துக்­களைத் தெரி­விக் கும் பிரே­ரணை மீது உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி ­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில், 

1977ஆம் ஆண்டு முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜெய­வர்த்­த­னவின் ஆட்­சியில் அர­சியல் பிர­வேசம் செய்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தற்­போது நாற்­பது ஆண்­டு­களை பூர்த்தி செய்­துள்ளார்.

அன்­றைய காலத்தில் மத்­திய பொரு­ளா­தார நிலை­மை­களே காணப்­பட்­டன. இந்­நி­லையில் ஜே.ஆர்.ஜெய­வர்த்­தன திறந்த பொரு­ளா­தாரக் கொள்­கையை அறி­மு­கப்­ப­டுத்­தினார். கன­வான்­க­ளுக்கு அவ­சி­ய­மான கொள்­கை­யினைக் கொண்­டி­ருந்த  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஜே.ஆர்.ஜெய­வர்த்­த­ன­வுக்கு நிழல்­போன்று செயற்­பட்டார்.

ஜே.ஆர்.ஜெய­வர்த்­தன முன்­னெ­டுத்த சந்­தைப்­ப­டுத்தல் பொரு­ளா­தா­ரத்தில் நம் பிக்கை ­கொண்­டி­ருந்­த­வ­ரான பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அவ­ருடன் இணைந்து பணி­யாற்­றி­ய­தோடு சமூ­கப்­பொ­ரு­ளா­தாரக் கொள் கை­க­ளையும் பின்­பற்­ற­லானார். 

நுண்­ண­றிவும் துணிவும் பொறு­மையும் நிதா­னமும் கொண்டு விளங்­கிவரும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஒரு தலை­வ­ருக்கு இருக்க வேண்­டிய குணாம்­சங்­களைக் கொண்­ட­வ­ராவார்.

பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­று­கின்­ற­போது எதி­ரா­ளிகள் என்­றாலும் கூட கோபப்­பட்ட சந்­தர்ப்­பத்­திலும் கூட அச்­சு­றுத்தல் விடுக்­காது தெளி­வாக கருத்­துக்­களை முன்­வைப்­ப­வ­ராக இருக்­கின்றார். 

முன்னாள் ஜனா­தி­பதி ரண­சிங்க பிரே­ம­தா­ஸ­வுக்கு எதி­ராக குற்றப்  பிரே­ர­ணை­யொன்று கொண்டு வரப்­பட்ட சந்­தர்ப்­பத்தில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க எவ்­ வி­தமாக நேர்­மை­யாகச் செயற்­பட்­டி­ருந் தார் என்­பதைப் பார்க்க முடியும். கொள்கை மீதான பற்றும் நேர்­மை­யான செயற்­பாடும் கட்­சியின் மீதான அர்ப்­ப­ணிப்பும் அவ­ரு­டைய சிறப்­பான பண்­பு­க­ளாக காணப்­ப­டு­கின்­றன. 

தனிப்­பட்ட முறையில் அவ­ருடன் இணைந்து செயற்­பட்ட ஒரு­வ­ராக நானும் இருக்­கின்றேன். 2001 ஆம் ஆண்டு பிர­த­ம­ராக இருந்­த­போது அமைச்­ச­ர­வையில் இருந்து நான் அகற்­றப்­பட்­டதன் பின்­ன­ரான ஐந்து மாத­கால பகு­தியில் அவ­ரு­டைய சீர்­செய்யும் செயற்­பா­டு­களை என்னால் நன்கு அவ­தா­னிக்க முடிந்­தது. 

அதே­நேரம் எந்­த­வொரு விமர்­ச­னத்­தி­னையும் எதிர்­கொள்தல் மற்றும்  தனது நிலைப்­பாட்டில் உறு­தி­யாக இருக்­கின்ற தன்­மையும் அவ­ரி­டத்தில் காணலாம். குறி ப்­பாக விடு­த­லைப்­ பு­லி­க­ளுடன் சமா­தான ஒப்­பந்தம் கைச்­சாத்­திடப்பட்டபோது பிர­ தமர் ரணி­லுக்கு எதி­ராக கடு­மை­யான விமர்­ச­னங்கள் எழுந்­தன. 

விடு­த­லைப்­பு­லிகள் முன்­வைத்த இடை க்கால அரசு கோரிக்­கையை பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஏற்­றி­ருந்தால் 2005 ஆம் ஆண்டே அவர் ஜனா­தி­ப­தி­யா­கியி­ருப்பார். ஆனால் அவர் அவ்­வாறு செய்­ய­வில்லை; நாட்டின் நலன் கருதி அதனை நிரா­க­ரித்தார்.

அவ்­வா­றி­ருக்­கையில் கடந்த காலத் தில் இருந்த அர­சாங்­கத்தில் அமைச்­ச­ராக இருந்­த­மையை இட்டு நான் கவ­லை ­ய­டை­கின்றேன். இரா­ணு­வம் ­பெற்ற யுத்­த­ வெற்­றியை குருட்­டுத்­த­ன­மாக பயன்படு த்தினார்கள். இனங்களுக்கிடையில் பிரி வினைகளை ஏற்படுத்தும் செயற்பாடு களை முன்னெடுத்தார்கள். இந்த நாட் டின் பிரஜைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி னார்கள். 

அவற்றுக்கெல்லாம் எதிராக எதிர்க் கட்சி யில் இருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குரலெழுப்பி இன ஒற்றுமையை மையப் படுத்தி செயற்பட்டார். அவருக்கு எமது கட்சி மற்றும் மக்கள் சார்பில் வாழ்த்துக் களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார்.