ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறையொன்றை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் சிறப்பாக முன்னெடுத்திருந்திருந்தது.
இந்தப் பயிற்சிப்பட்டறையானது கொழும்பு - 5இல் அமைந்துள்ள இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை (11) இடம்பெற்றது.
குறித்த பயிற்சிப் பட்டறையில் ஒருங்கிணையும் ஊடகத்துறை: வாய்ப்புக்களும் சவால்களும் என்ற தலைப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக கலைப் பீடத்தின் பீடாதிபதியும் ஊடகக் கற்கைகள் துறைத் தலைவரும் பேராசிரியருமான சி.ரகுராமும், செயற்கை நுண்ணறிவு தொடர்பில் ஊடகவியலாளர் அருண் ஆரோக்கியநாதனும் மற்றும் இதழியலில் செயற்கை நுண்ணறிவும் சவால்களும் : கோட்பாட்டு ரீதியான கரிசணைகளும் என்ற தலைப்பில் சட்டத்தரணியும் ஊடக பயிற்றுவிப்பாளருமான பெனிஸ்லஸ் துஷானும் விளக்கங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டிருந்தனர்.
இந்த பயிற்சி பட்டறையில் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் சிறிகஜன், செயலாளர் ஜெயந்திரன் மற்றும் போஷகர் நிக்சன்,மூத்த பத்திரிகையாளர் அனந்த பாலகிட்னர் உட்பட பல்வேறு பிரதேசங்களை பிரதிநிதித்துவபடுத்தும் தமிழ் ஊடகவியலாளர்களும் உள்ளிட்டோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

















































கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM