(நெவில் அன்தனி)
விசாகபட்டினம் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்ற மிகவும் பரபரப்பான மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் மிகப் பெரிய வெற்றி இலக்கை அடைந்த அவுஸ்திரேலியா, வரவேற்பு நாடான இந்தியாவை 6 பந்துகள் மீதம் இருக்க 3 விக்கெட்களால் வெற்றிகொண்டது.

அனாபெல் சதர்லண்ட் பதிவுசெய்த 5 விக்கெட் குவியல், அணித் தலைவி அலிசா ஹீலி குவித்த அபார சதம் என்பன அவுஸ்திரேலியாவுக்கு மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டிக்கொடுத்தன.
இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 331 ஓட்டங்கள் என்ற மிகப் பெரிய மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 49 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 331 ஓட்டங்களைக் குவித்து வெற்றியீட்டியது.

இதன் மூலம் உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான தனது வாய்ப்பை அவுஸ்திரேலியா சற்று அதிகரித்துக்கொண்டதுடன் இந்தியாவின் அரை இறுதி வாய்ப்பு ஊசலாட்டத் தொடங்கியுள்ளது.
ஆரம்ப வீராங்கனை அலிசா ஹீலி மிக அற்புதமாகத் துடுப்பெடுத்தாடி 107 பந்துகளில் 21 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 142 ஓட்டங்களைக் குவித்தார்.

இதனிடையே 40 ஓட்டங்களைப் பெற்ற ஃபோப் லிச்பீல்டுடன் முதலாவது விக்கெட்டில் 85 ஓட்டங்களை அலிசா ஹீலி பகிர்ந்தார்.
மொத்த எண்ணிக்கை 154 ஓட்டங்களாக இருந்தபோது எலிஸ் பெரி உபாதைக்குள்ளாகி 32 ஓட்டங்களுடன் தற்காலிய ஓய்வு பெற்றார். எனினும் 6ஆவது விக்கெட் வீழ்ந்த பின்னர் மீண்டும் துடுப்பெடுத்தாட களம் புகுந்த எலிஸ் பெரி 47 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
மத்திவரிசையில் ஆஷ்லி கார்ட்னர் 45 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் ஸ்ரீ சரணி 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் தீப்தி ஷர்மா 52 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அமன்ஜோத் கோர் 68 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 48.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 330 ஓட்டங்களைப் பெற்றது.
ஸ்மிரித்தி மந்தனா, ப்ராத்திக்கா ராவல் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதங்கள் குவித்ததுடன் 155 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
மந்தனா 66 பந்துகளில் 9 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 80 ஓட்டங்களைப் பெற்றார். இதனிடையே மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 5000 ஓட்டங்களை மந்தனா பூர்த்திசெய்தார்.
ப்ராத்திக்கா ராவல் 75 ஓட்டங்களைப் பெற்றார்.
அவர்களை விட ஹார்லீன் டியோல் 38 ஓட்டங்களையும் ஜெமிமா ரொட்றிகஸ் 33 ஓட்டங்களையும் ரிச்சா கோஷ் 32 ஓட்டங்களையும் பெற்றனர்.
43ஆவது ஓவரில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 294 ஓட்டங்களைப் பெற்றிருந்த இந்தியா, அதன் கடைசி 6 விக்கெட்களை வெறும் 36 ஓட்டங்களுக்கு இழந்தது. இதுவும் அதன் தோல்விக்கு மற்றொரு முக்கிய காரணமாக அமைந்தது.
பந்துவீச்சில் அனாபெல் சதர்லண்ட் 40 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் சொஃபி எக்லஸ்டொன் 75 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகி: அலிசா ஹீலி.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM