அண்மைக்காலமாக எலிக்காய்ச்சல் நோயினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு செல்வதை சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு புள்ளிவிபர தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளது.அதற்கமைவாக அரசாங்கத்தின் பாரிய கிளீன் ஷிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் மக்களை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் 10 ஆம் திகதி அநுராதபுரம் வடமத்திய மாகாண சபை கட்டிட தொகுதிக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்டது.
எலிக்காய்சல் மரணம் பெரும் ஆபத்து என்பதால் எலிக்காய்ச்சல் நோய் சம்பந்தமாக மக்களை தெளிவுபடுத்தும் ஊர்வலம் பாரிய பாதையாத்திரை வடமத்திய மாகாண சபை கட்டிட தொகுதிக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்டு பிரதான வீதீஊடாக அநுராதபுரம் மாநகர சபை அலுவலக கட்டிட தொகுதி வரைக்கும் சென்றது.
இதன்போது எலிக்காய்சல் தொற்றியிருந்தது எவ்வாறு தம்மை பாதுகாத்துக் கொள்வது என்ற விடயத்தினை மக்களுக்கு துண்டுப்பிரசுரங்களை வழங்கி தெளிவுபடுத்தப்பட்டதுடன் வயல் வேலைகளில் இறங்குவதற்கு முன்னர் முன்னர் இருந்து வேலை முடியும் வரை கிழமைக்கு ஒரு முறை "டொக்சி சைக்ளீன் " மாத்திரையினை பெற்றுக்கொள்ள வேண்டும் என மக்களை தெளிவுபடுத்தப்பட்டது.
இம்மாத்திரை பாரிய பக்கவிளைவுகள் அற்றது என இதன்போது மக்களுக்கு எடுத்துக்கூறப்பட்டது.கிழமைக்கு ஒரு முறை இம்மாத்திரையை இரண்டு மாத்திரைகள் வீதம் வயல் வேலைக்கு இறங்குவதற்கு முன்னர் பெற்றுக்கொள்ள வேண்டும்.அனைத்து சுகாதார சேவை அலுவலகங்களிலும் இம்மாத்திரையினை பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
விவசாய நடவடிக்கைகளின் போதே அதிகளவான வர்கள் எலிக்காய்ச்சல் தொற்று நோய்க்கு ஆளாகின்றனர்.இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் எலிக்காய்ச்சல் நோயினால் அநுராதபுரம் மாவட்டத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.வருடமொன்றுக்கு இலங்கையில் 260 க்கும் அதிகமானவர்கள் இந் நோயினால் உயிரிழக்கின்றனர்.
வயல் வேலைகளில் ஈடுபடுகின்றவர்கள் வயல் வேலைக்கு இறங்குவதற்கு முன்னர் மாத்திரைகளை குடிப்பதற்கு அதிகம் அக்கறை எடுக்காத காரணம் மற்றும் மாத்திரைகளை குடிப்பதற்கு சோம்பல் தனம் காட்டுவதால் எலிக்காய்ச்சல் நோய்க்கு ஆளாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தேசிய மக்கள் சக்தியின் அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சேன நாணயக்கார அவர்களின் தலைமையில் இந்பேரணி நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயக அநுராதபுரம் அலுவலக தொற்றுநோய் பிரிவின் விசேட வைத்திய அதிகாரி தேஜன சோமதிலக்க உள்ளிட்ட சுகாதார துறை அதிகாரிகள் மற்றும் அநுராதபுரம் மாவட்ட அரசாங்க அதிபர் ரஞ்சித் விமலசூரிய உள்ளிட்ட அரச அதிகாரிகள் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM