(செ.சுபதர்ஷனி)
நாரம்மல பகுதியில் லொறி ஒன்று தொலைதொடர்பு கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் லொறியில் பயணித்த இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
சம்பவம் தொடர்பில் 49 வயதுடைய லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
குருநாகல் நாரம்மல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொரொம்பாவ அலஹிட்டியாவ பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (12) அதிகாலை மேற்படி விபத்து பதிவாகியிருந்தது. ஹொரொம்பாவ - மாவீ-எல வீதியில் ஹொரொம்பாவ நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த லொறி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தொலைத்தொடர்பு கம்பத்தில் மோதி வடிகாலில் விழுந்து விபத்துக்குள்ளானது.
சம்பவத்தில் லொறியின் பின்னால் பயணித்த இருவர் தூக்கி வீசப்பட்டு லொறிக்கு அடியில் சிக்கி படுகாயமடைந்த நிலையில், நாரம்மல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 26, 29 வயதுடைய வவுனியா மற்றும் நெடுங்கேணி பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் 49 வயதுடைய புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவராவார். பிரேத பரிசோதனைக்காக சடலங்கள் நாரம்மல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் விபத்து சம்பவம் தொடர்பில் நாரம்மல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM