(நெவில் அன்தனி)
லொஸ் ஏஞ்சலிஸில் நடைபெறவுள்ள 2028 ஒலிம்பிக் விளையாட்டு விழா வரை மூன்று வருடங்களுக்கு இலங்கை விளையாட்டு வீரர்கள் எட்டு பேருக்கு சர்வதேச ஒலிம்பிக் குழுவும் ஒலிம்பிக் ஒருமைப்பாட்டுக் குழுவும் மாதம் 1500 டொலர்கள் பெறுமதியான புலமைப்பரிசில்களை வழங்கியுள்ளது.
இதற்கான சான்றிதழ்களை தேசிய ஒலிம்பிக் குழுத் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம், செயலாளர் நாயகம் ரிப்தி பஹாஸ் ஆகியோர் வழங்கிவைத்தனர்.
இந்த வைபவம் விளையாட்டுத்துறை அமைச்சின் டன்கன் வைட் கேட்போர்கூடத்தில் சனிக்கிழமை (11) நடைபெற்றது.
விரேன், ரனித்மா, தருஷி ஆகியோர் வெவ்வேறு போட்டிகளில் வெளிநாடுகளிலும் உள்ளூரிலும் பங்குபற்றுவதால் அவர்களுக்கான சான்றிதழ்களை அவர்களது பெற்றோர் பெற்றுக்கொண்டனர்.
சர்வதேச ஒலிம்பிக் குழு மற்றம் ஒலிம்பிக் ஒருமைப்பாட்டுக் குழுவினால் வழங்கப்படும் புலமைப்பரிசில்களுக்கு 43 வீரர்களது பெயர்களை விளையாட்டுத்துறை சம்மேளனங்கள் சமர்ப்பித்திருந்தன.
கஸ்தூரி செல்வராஜா, கப்பில விஜேகுணவர்தன, ஷிரன்த பீரிஸ் ஆகிய முன்னாள் பிரபல வீரர்களைக் கொண்ட குழுவினரால் புலமைப்பரிசில்களுக்கான அதிசிறந்த எட்டு வீரர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.
சர்வதேச ஒலிம்பிக் புலமைப் பரிசில்களை பெற்றவர்கள் விபரம் வருமாறு:
நெத்மி அஹின்சா (மல்யுத்தம்), ருமேஷ் தரங்க பத்திரகே (ஈட்டி எறிதல்), விரேன் நெத்தசிங்க (பட்மின்டன் - உலக தரவரசையில் 58ஆம் இடம்), அருண தர்ஷன (400 மீற்றர் ஓட்டப் போட்டி), தருஷி அபேசேகர (800 மீற்றர், 1500 மீற்றர்), ரனித்மா லியனகே (பட்மின்டன்), ஹிருக்கி டி சில்வா (நீச்சல்), லெசந்து அர்த்தவிருது (உயரம் பாய்தல்)



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM