நாரம்மலயில் வாகன விபத்து ; இரண்டு பேர் உயிரிழப்பு!

12 Oct, 2025 | 12:58 PM
image

நாரம்மல, அலஹிட்டியாவ, ஹொரம்பாவ-மாவி எல வீதியில்  இன்று ஞாயிற்றுக்கிழமை (12) அதிகாலையில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதியின்  கட்டுப்பாட்டை இழந்த லொறியொன்று தொலைதொடர்பு கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, லொறியின் பின்புறத்தில் பயணித்த இருவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள்  நாரம்மல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் வவுனியா மற்றும் நெடுங்கேணி பகுதியைச்  சேர்ந்த 26 மற்றும் 29 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

மேலும், லொறியின் சாரதி  கைது செய்யப்பட்டுள்ளதோடு, இந்த விபத்து குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

update ; தலாவ பஸ் விபத்தில்...

2025-11-10 15:27:21
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ;...

2025-11-10 13:29:34
news-image

தமிழர்களுக்கான அதிகாரப் பரவலாக்கம் நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும்...

2025-11-10 13:28:54
news-image

அரசியல் தீர்வும் பொறுப்புக் கூறலும் :...

2025-11-10 15:16:29
news-image

தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து ;...

2025-11-10 15:01:12
news-image

யாழ். நெடுந்தீவில் கைதான 29 இந்திய...

2025-11-10 14:56:40
news-image

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மருந்து மாத்திரைகள், திரவங்கள்,...

2025-11-10 13:26:20
news-image

கடும் மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு...

2025-11-10 13:43:54
news-image

மன்னாரில் பீடி இலைகளுடன் மூவர் கைது!

2025-11-10 12:44:07
news-image

'முழு நாடுமே ஒன்றாக': போதைப்பொருள் சுற்றிவளைப்பில்...

2025-11-10 13:27:38
news-image

"ஹோரி சுத்தா" கைது!

2025-11-10 12:39:14
news-image

உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவி திடீரென...

2025-11-10 12:35:54