யாழின் ஒளிக்கோவில் – யாழ்ப்பாணப்பொதுநூலகம்

12 Oct, 2025 | 12:25 PM
image

அறிவின் தீபம் பொங்கியதொரு கோபுரம்,

அழிந்த பின் எழுந்து நின்றது – நம் யாழின் பெருமை சுமந்த தரிசனம்.

புத்தகத் தூண்கள் பேசின – பொலிவற்ற காலத்தின் கதைகளை,

மனம் பேசும் மொழியில் விழித்தெழும் மௌனப் பெருமைகளை.

அங்கே ஒரு வரி – மனத்தின் ஆழக் குரல்,

ஒரு பக்கம் – பயணிக்கும் சிந்தனையின் பசுமை.

தோன்றாத உணர்வுகள், தொலையாத சுவாசங்கள்,

நூல்களில் இல்லை – ஆனால் வாசிக்கும் மனத்தில் வாழ்ந்தவைகள்.

பளிச்சென்ற கட்டடமல்ல இது,

நாம் கொண்டிருக்கும் நாகரிகத்தின் நீண்ட நிழல்!

வெந்து சிதைந்த பக்கங்களில் கூட,

விழிப்புணர்வின் முளைகள் மலர்ந்தன – விடியலுக்கு முன்பே.

ஒரு நூலகம் என்பது பக்கம் பெயர்த்தல் அல்ல,

அது ஒரு சமூகத்தின் மன ஓவியம்,

தரமான சிந்தனையின் தூண்கள்,

மறந்து போன விடுதலையின் ஓசைகள்.

வாசிப்பு ஒரு மன பயணம் –

நம் விழிகளுக்கு மறைந்து கிடக்கும் உண்மை தேடல்.

யாழ்ப்பாணம், உன்னில் நின்ற நம் நூலகம்,

நம் இனத்தின் உயிரும் ஒளியும் ஒரே நேரத்தில்!

நடராசா கோபிராம்
யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்
உளவியல்சிறப்புக்கலைமாணவன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு வீதியில் வெற்றிவேல் தரிசனம்! ;...

2026-07-29 11:32:12
news-image

பல ஜனாதிபதிகளிடமும் பணியாற்றிய ராகுலன்

2026-07-03 18:32:01
news-image

மணற்சேனை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின்...

2026-06-29 09:52:06
news-image

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மஹோற்சவத்தை முன்னிட்டு...

2026-06-26 18:41:54
news-image

முல்லைத்தீவு வட்டுவாகல் சப்தகன்னியர் ஆலய வருடாந்த...

2026-06-23 16:55:38
news-image

யாழ். நல்லூர் கைலாசப் பிள்ளையார் கோவில்...

2026-06-21 16:13:50
news-image

நல்லூர் கைலாசப் பிள்ளையார் கோவில் மஹோற்சவம்...

2026-06-13 16:32:13
news-image

மலையகத்தின் வலியும் ஒரு சுயாதீனக் குரலின்...

2026-06-11 09:05:37
news-image

கவிப்பொழிவும் பட்டிமண்டபமும் : 'கம்பன் விழா...

2026-05-02 10:37:46
news-image

மனித நேயமிக்க ஆளுமை கே.பொன்னுத்துரையின் அகவை...

2026-04-21 11:21:21
news-image

மிகவும் சிறந்த  ஆஷா போஸ்லேவின் சில...

2026-04-13 20:56:05
news-image

தமிழைத் தமிழாக உலக அரங்கில் எடுத்துச்...

2026-04-11 18:56:28