(லியோ நிரோஷ தர்ஷன்)
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சர்வாதிகாரப் போக்கிற்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராகக் கொழும்பில் மாபெரும் எதிர்ப்புப் பேரணி ஒன்றை நடத்த எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டுள்ளன.
இந்தப் பேரணியை நவம்பர் 11 ஆம் திகதி நடத்துவதற்கும், பிரதான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பங்களிப்புடன் நடத்துவதற்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
பிளவுப்பட்டிருந்த ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஒன்றிணைந்த அரசியல் பயணத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் எதிர்ப்புப் பேரணிக்கான கூட்டு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இதே வேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்ம அமரவீர மற்றும் துமிந்த திசாநாயக்க தரப்பும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும்தயாசிறி ஜயசேகர ஆகிய தரப்புகளும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளன.
எதிர்வரும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி நுகேகொடையில் ஆம்பிக்கப்பட உள்ள இந்த அரச எதிர்ப்பு பேரணியை நாடளாவிய ரீதியில் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுமார் ஒருவருடகால இடைவெளிக்கு பிறகு ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து எதிர்ப்புப் பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM