கொழும்பு பாத்திமா நளீரா எழுதிய ஏழாம் வானத்தின் சிறகுகள் கவிதைத் தொகுதி வெளியீட்டு விழா!

12 Oct, 2025 | 09:14 AM
image

கொழும்பு பாத்திமா நளீரா எழுதிய ஏழாம் வானத்தின் சிறகுகள் கவிதை தொகுதி வெளியீட்டு விழா இன்று 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு கொழும்பு டி. ஆர். விஜேவர்தன மாவத்தையிலுள்ள தபால் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. 

இந்த வெளியீட்டு விழாவுக்கு மூத்த பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் தலைமை தாங்குவார்.  ஜே. ஜே பவுண்டேசன் நிறுவனரும் பணிப்பாளருமான கலாநிதி அல்ஹாஜ்  ஐ. வை. எம். ஹனீப்  முன்னிலைமையில் நடைபெறும் இவ்விழாவில் முதன்மை அதிதியாக உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ. எச். எம். டி. நவாஸ் கலந்து கொள்கிறார். 

கௌரவ அதிதிகளாக நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம் , ரிசாத் பதியுதீன் ,மனோ கணேசன் , நிசாம் காரியப்பர் ஆகியோரும் குடும்ப அதிதியாக மொஹமட் ஷிபான் காரியப்பரும் கலந்து கொள்கின்றனர். 

மொஹமட் சிராஃப் ஸாகிரின் கிராத்துடன் ஆரம்பமாகும் நிகழ்வில் கவிமணி அல்அஸூமத், கவிஞர் ரவூப் ஹக்கீம் உட்பட பலரும் நூல் தொடர்பில் கருத்துக்களை முன்வைப்பர். 

இலங்கை வானொலி தென்றல் சேவையின் பதில் உதவி பணிப்பாளர் நாகபூசணி கருப்பையா , கவிஞர்களான ரவூப் ஹசீர்,என் நஜூமுல் ஹூசைன் , மற்றும் கவிதாயினி கமர்ஜான் பீபீ ஆகியோர் கவிதை வாசிப்பர். 

புர்கான் பி ஏற்புரை நடத்துவார். 

சிரேஷ்ட ஒலி ஒளிபரப்பாளர் அஹமட் எம். நசீர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓடெல் நிறுவனத்தில் நத்தார் தினத்தை வரவேற்கும்...

2025-11-14 18:52:47
news-image

பங்களாதேஷ் டஃபோடில் சர்வதேச பல்கலைக்கழகத்தின் இணைப்...

2025-11-14 18:38:46
news-image

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் “மலையகத் தேசியம்...

2025-11-12 10:43:52
news-image

கலாமித்ரா விருது விழாவை முன்னிட்டு மகளிருக்குப்...

2025-11-11 17:22:27
news-image

வெள்ளவத்தையில் புதிதாக திறக்கப்பட்ட வீரகேசரி விளம்பர...

2025-11-11 14:19:39
news-image

தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் பொறுப்புக்கூறலும் ;...

2025-11-11 11:05:45
news-image

இலங்கை - இந்திய 'சமஸ்கிருத மஹோத்ஸவம்'...

2025-11-10 17:27:52
news-image

பனைசார் கைப்பணி பயிற்சி நெறியை நிறைவு...

2025-11-10 17:23:50
news-image

சுவிற்ஸர்லாந்தில் தோ இத்தோசுக்காய் கராத்தே சுற்றுப்போட்டி

2025-11-10 16:18:16
news-image

பயிற்சிகளமாக பரிணமித்த ஹைக்கூ  கவியரங்கம் 

2025-11-10 07:14:11
news-image

குளோபல் வர்த்தக மாநாட்டிற்கு நியூ சவுத்...

2025-11-08 19:57:18
news-image

சைவமங்கையர் வித்தியால பரிசளிப்பு விழா

2025-11-08 13:52:50