வசூலில் சாதனை படைக்கும் ரிஷப் ஷெட்டியின் 'காந்தாரா சாப்டர் 1 '

11 Oct, 2025 | 05:43 PM
image

பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான ரிஷப் ஷெட்டியின் 'காந்தாரா  சாப்டர் 1 ' திரைப்படம் திரையுலக வணிகர்களின் எதிர்பார்ப்பை மீறி இந்திய மதிப்பில் ஐநூறு கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்து வருகிறது.

நடிகரும், இயக்குநருமான ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் உருவான 'காந்தாரா சாப்டர் 1 ' எனும் திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளியானாலும்... வசூலில் அதிலும் இந்திய அளவில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.

இந்த திரைப்படம் வெளியான முதல் வாரத்தில் உலகம் முழுவதும் 509 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. இன்றளவிலும் பட மாளிகைகளில் குறிப்பாக வட இந்தியாவில் இப்படத்திற்கு ரசிகர்கள் பேராதரவு அளித்து வருவதால்... மேலும் சில நூறு கோடிகளை வசூலிக்கும் என திரையுலக வணிகர்கள் அவதானித்திருக்கிறார்கள்.

தெய்வீக அனுபவம் - பிரமிக்க வைக்கும் வி எஃப் எக்ஸ் காட்சிகள்-  உணர்வை தூண்டும் இசை - அற்புதமான கதாபாத்திர வடிவமைப்பு - இதமான கற்பனை - என பல அம்சங்கள் ரசிகர்களை கவர்ந்திருப்பதால்.... படத்திற்கு பேராதரவு கிடைத்து வருகிறது என ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள்.

அதே தருணத்தில் கன்னட திரையுலகம்- தெலுங்கு திரையுலகத்திடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை ரசிகர்களிடமிருந்து வசூலிக்கும் சூட்சமத்தை கற்றுக் கொண்டிருப்பதாகவும் திரையுலகினர் உற்சாகத்துடன் தெரிவிக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்