தொடர்ந்து வெற்றி படங்களை வழங்கி நட்ச்சத்திர நடிகராக உயர்ந்திருக்கும் ஹரிஷ் கல்யாண் கதையின் நாயகனாக - அதிரடி எக்சன் நாயகனாக - நடித்திருக்கும் 'டீசல் ' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநரும், நடிகருமான சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'டீசல்' திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, வினய் ராய், சாய் குமார், அனன்யா, கருணாஸ், போஸ் வெங்கட், ரமேஷ் திலக், காளி வெங்கட், விவேக் பிரசன்னா, சச்சின் கடேக்கர், மாறன் என ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கிறார்கள்.
எம். எஸ். பிரபு மற்றும் ரிச்சர்ட் எம். நாதன் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு திபு நினன் தோமஸ் இசையமைத்திருக்கிறார். அதிரடி எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தேர்ட் ஐ என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் தேவராஜூலு மார்க்கண்டேயன் தயாரித்திருக்கிறார்.
தீபாவளி கொண்டாட்டமாக எதிர்வரும் 17 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதில் டீசல் எனும் எரிபொருள் விற்பனை சந்தையின் பின்னணியில் இயங்கும் மாஃபியாக்களை பற்றி பரபர எக்சன் காட்சிகள் இடம் பிடித்திருப்பதால்... ரசிகர்களிடத்தில் நேர் நிலையான அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த முன்னோட்டத்தின் மூலம் நடிகர் ஹரிஷ் கல்யாண் 'பார்க்கிங்', 'லப்பர் பந்து' ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்படத்தின் வணிக ரீதியான வெற்றி மூலம் ஹட்ரிக் அடிப்பார் என திரையுலக வணிகர்கள் உறுதிப்பட தெரிவிக்கிறார்கள்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM