நடிகர் ஸ்ரீராம் கார்த்திக் நடிக்கும் 'மைலாஞ்சி' படத்தின் இசை மற்றும் கிளர்வோட்டம் வெளியீடு

11 Oct, 2025 | 05:28 PM
image

'கன்னி மாடம்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி பிரபலமான நடிகர் ஸ்ரீராம் கார்த்திக் காதல் நாயகனாக நடித்திருக்கும் 'மைலாஞ்சி' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் கிளர்வோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இதற்கான பிரத்யேக நிகழ்வில் திருமதி அகிலா பாலுமகேந்திரா மற்றும் மூத்த இசையமைப்பாளர் - பாடகர்- இயக்குநர்  கங்கை அமரன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றி படத்தின் இசை மற்றும் கிளர்வோட்டத்தை வெளியிட்டனர். 

தமிழ் இலக்கிய பரப்பில் எழுத்தாளராக அறிமுகமாகி பிரபலமான அஜயன் பாலா இயக்குநராக அறிமுகமாகும் 'மைலாஞ்சி' எனும் திரைப்படத்தில் ஸ்ரீராம் கார்த்திக், க்ருஷா குரூப், முனீஸ்காந்த் , சிங்கம் புலி, தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

செழியன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசைஞானி' இளையராஜா இசையமைத்திருக்கிறார்.  காதல் உணர்வை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் மருத்துவர் ப. அர்ஜுனன் தயாரித்திருக்கிறார்.

விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக விழாவில் படக்குழுவினருடன் திருமதி அகிலா பாலு மகேந்திரா, கங்கை அமரன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் ஆர். வி. உதயகுமார், பேரரசு, ஏ. எல். விஜய், மிஷ்கின், மீரா கதிரவன், தமிழக காவல்துறை உயரதிகாரி தினகரன் ஆகியோர் பங்கு பற்றினர்.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் ப. அர்ச்சுனன் பேசுகையில், '' உணர்வுகள் எதுவும் புதிதில்லை. எல்லா மனிதர்களுக்கும் உணர்வுகள் ஒன்றுதான். இந்த பூமி அழியும் வரை காதல் ஒரு உன்னதமான- நெகிழ்வான- ஒரு உணர்வு. அந்த காதலை புதிதாக சொல்லி இருக்கும் திரைப்படம் தான் 'மைலாஞ்சி'. உண்மையான காதல் என்பது எப்போதும் காதலாகவே இருக்க வேண்டும் என்பதை சொல்வதற்காகவே இந்தத் திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறோம்'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்