வில் ( WILL) - திரைப்பட விமர்சனம்

11 Oct, 2025 | 05:22 PM
image

வில் ( WILL) - திரைப்பட விமர்சனம் 

தயாரிப்பு : ஃபுட் ஸ்டெப் புரொடக்ஷன் - கோத்தாரி மெட்ராஸ் இன்டர்நேஷனல் லிமிடெட் 

நடிகர்கள் : சோனியா அகர்வால், விக்ராந்த், அலீக்யா, பதம் வேணுகுமார், மோகன் ராமன், சுவாமிநாதன் மற்றும் பலர்.

இயக்கம் : எஸ். சிவராமன்

மதிப்பீடு: 2/ 5

சோனியா அகர்வால் நீதியரசராக தோன்றியிருக்கும் படம் - விக்ராந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் படம்- உயில் தொடர்பான நுட்பமான விவரங்களை மையப்படுத்திய படம்-  என்ற படக் குழுவினரின் அறிவிப்பின் காரணமாக ஏதேனும் புதிய விடயங்களை அறிந்து கொள்ளலாம் என்ற ஆவலில் பட மாளிகைக்குள் சென்ற ரசிகர்களுக்கு ஏதேனும் ஆதாயம் கிடைத்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

தென்னிந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் என்ற ஊரில் பிறந்த விக்னேஷ் ரெட்டி (( பதம் வேணுகுமார்) என்பவர் சுய விருப்பத்தின் பெயரில் சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மது- மாது- இசை- என வாழ்க்கையை அனுபவித்து வருகிறார்.

இவரது சட்ட விரோதமான தொடர்புகளை தெரிந்து கொண்ட அவரது குடும்ப உறுப்பினர்கள் சொத்து சம்பந்தமாக அவர் எழுதி வைத்திருக்கும் உயிலை பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள்.

இந்நிலையில் விக்னேஷ் ரெட்டி சித்தூரில் உள்ள சொத்துக்களை தன் சட்டபூர்வமான இரண்டு பிள்ளைகளுக்கு எழுதி வைத்திருக்கிறார். ஆனால் அவருக்கு சொந்தமான சென்னையில் உள்ள இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான அடுக்குமாடி குடியிருப்பை ஷ்ரத்தா என்ற பெண்ணின் பெயருக்கு எழுதி வைத்திருக்கிறார்.

விக்னேஷ் ரெட்டியின் வாரிசுகள்- சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பையும் தங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ள திட்டமிடுகிறார்கள். இதனால் நீதிமன்றத்தில் ஷ்ரத்தா என்ற பெயரில் ஒரு பெண்ணை போலியாக ஆஜர்படுத்துகிறார்கள்.

இந்த வழக்கினை விசாரிக்கும் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசருக்கு ( பெண் நீதிபதி- சோனியா அகர்வால்) இதில் ஏதோ தவறுகளும், குளறுபடிகளும் நடந்து இருக்கலாம் என சந்தேகம் எழுகிறது.

இதற்காக நீதிமன்றத்திற்குரிய காவல் அதிகாரியாக பணியாற்றும் பழனிவேல் (  விக்ராந்த்) என்பவரிடம் இந்த வழக்கின் விசாரணையை ஒப்படைக்கிறார். பழனிவேல் - ஷ்ரத்தா என்பவர் யார்? என்பதை கண்டறியும்  பயணத்தை மேற்கொள்கிறார். இதில் பழனிவேல் பல உண்மைகளை கண்டறிகிறார்.

அது என்ன? என்பதும்... உண்மையான ஷ்ரத்தாவிடம் இந்த சொத்து -உயில் -தொடர்பான பின்னணி குறித்து நீதிபதி விசாரித்து உண்மையை தெரிந்து கொள்கிறார்.

அதன் பிறகு நீதிபதியின் தீர்ப்பு என்ன? ஷ்ரத்தாவிற்கு அந்த சொத்து கிடைத்ததா? இல்லையா?  நீதிமன்றத்தை ஏமாற்றிய விக்னேஷ் ரெட்டியின் ஆண் வாரிசுகளுக்கு தண்டனை கிடைத்ததா? இல்லையா? என்பது போன்ற விடைகளுக்கு விடை அளிப்பது தான் இந்தப் படத்தின் கதை.

திரைக்கதையில் நிறுவனத்தில் பணியாற்றாமலேயே மாத சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான ஊதிய ஊழல் மற்றும் உயர் நீதிமன்றத்திற்கு என்று பிரத்யேகமாக காவல் அதிகாரிகளின் நியமனம் உண்டு என்ற இரண்டு விடயங்கள் புதிதாக இருக்கின்றன.

இது 'முதல் நாள் முதல் காட்சி'யில் அனைத்து படங்களையும் பார்க்கும் ஆர்வலர்களுக்கு புதிய தகவல்கள். இதற்காகவே சட்டத் தரணியாக பணியாற்றிய அனுபவம் கொண்ட இயக்குநரை பாராட்டலாம்.

ஷ்ரத்தா என்ற கதாபாத்திரம் உண்மை சம்பவத்தை தழுவி எழுதப்பட்டிருக்கிறது என கதாசிரியர் விவரித்தாலும்.... படைப்புக்கான அறத்தை மீறி வடிவமைத்திருப்பதால்... எதிர்மறை விமர்சனங்கள் எழுவது தவிர்க்க முடியாததாகிறது.

படத்தின் முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு- எதிர்பார்ப்பு- இரண்டாம் பாதியில் மறைந்து போகிறது. அத்துடன் தொய்வும், சோர்வும் எட்டிப் பார்க்கிறது. குறிப்பாக ஷ்ரத்தா என்ற கதாபாத்திரத்தின் வடிவமைப்பு ... ரசிகர்களிடம் அனுதாபத்தை ஏற்படுத்தாமல்.. தவறான பிம்பத்தை கட்டமைக்கிறது.

இதுபோன்ற அரிதாக நிகழக்கூடிய சட்ட விரோத உறவுகளை வலிமையான வாதங்களில் மூலம் நியாயப்படுத்தி இருக்க வேண்டும்... அதனை இயக்குநர் செய்ய தவறியிருக்கிறார்.

பெண் நீதியரசராக நடித்திருக்கும் சோனியா அகர்வால் கவனம் ஈர்க்கிறார். உயர் நீதிமன்றத்தின் காவல் அதிகாரியாக நடித்திருக்கும் விக்ராந்த் சில இடங்களில் அந்த புதுமையான கதாபாத்திரத்தை சினிமாவுக்கான கொமர்சல் ஃபார்முலாவில் வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு ஆறுதல் தருகிறார்.

முதல் பாதியில் இடம் பெறும் 'டெஸ்லா'  பாடல் அறிமுக இசையமைப்பாளர் சௌரப் அகர்வாலின் திறமையை வெளிப்படுத்துகிறது.

வில் -  பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட டிஜிட்டல் தள பார்வையாளர்களுக்கான படைப்பு.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதர்ஸ் - திரைப்பட விமர்சனம்

2025-11-07 17:43:23
news-image

புதுமுக நடிகர் மதி நடிக்கும் 'கும்கி...

2025-11-07 17:13:13
news-image

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'பராசக்தி' படத்தில் முதல்...

2025-11-07 16:59:16
news-image

சேர்.பொன்.இராமநாதன் காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடத்தின்...

2025-11-07 16:10:59
news-image

தனுஷ் நடிக்கும் 'தேரே இஷ்க் மே'...

2025-11-07 15:47:19
news-image

சாதனை படைத்து வரும் துல்கர் சல்மான்...

2025-11-07 15:31:25
news-image

இணையத்தை அதிர வைக்கும் பிரபுதேவா பட...

2025-11-07 15:23:24
news-image

டிஜிட்டல் தளங்களிலும் ஆரியன் படத்திற்கு சிறப்பான...

2025-11-07 15:09:59
news-image

நடிகர் வெற்றி நடிக்கும் 'லஷ்மி காந்தன்...

2025-11-06 16:56:38
news-image

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'தோட்டம் -...

2025-11-06 16:56:26
news-image

செல்ல பிராணியான நாய்களுக்கு பயிற்சி அளிக்கும்...

2025-11-06 16:56:06
news-image

'ஆக்சன் கிங்' அர்ஜுன் - ஐஸ்வர்யா...

2025-11-06 16:55:47