எம்மில் சிலருக்கு எதிர்பாராத விதமாக ஏதேனும் ஒரு உணர்வால் தாக்கப்பட்டால்... இதயத்துடிப்பு இயல்பான நிலையில் இருந்து மாற்றம் பெற்று அதீதமாகவோ அல்லது குறைவாகவோ துடிக்கக்கூடும்.
சிறிது நேரத்திற்குப் பிறகு பலருக்கும் இவை இயல்பாகி, இதயத்துடிப்பு சீரடையும். ஆனால் பலருக்கு பல தருணங்களில் இதயத் துடிப்பு சீரற்றதாக இருக்கும்.
இதற்கு உடனடியாக அவதானம் செலுத்தி, சிகிச்சை பெறாவிட்டால் பாரிய பாதிப்பு ஏற்பட்டு, உயிருக்கு அச்சுறுத்தல் உண்டாகக்கூடும். இதன் காரணமாகவே இதயத்துடிப்பு சீராக இல்லை என்றால்... உடனடியாக அருகில் இருக்கும் வைத்தியசாலைக்குச் சென்று இதய சிகிச்சை நிபுணரை சந்தித்து ஆலோசனையும் சிகிச்சையும் பெற வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
பொதுவாக இதயத்துடிப்பு சீரற்றதாக இருந்தால் அதனை பிரத்யேக பரிசோதனையின் மூலம் வைத்திய நிபுணர்கள் துல்லியமாக அவதானித்து, இதயத்தின் எந்த பகுதியில் சமசீரற்ற இதயத் துடிப்பு ஏற்படுகிறதோ... அதனை அட்வான்ஸ் எலக்ட்ரோட் பிளேஸ்மென்ட் எனும் நவீன சிகிச்சை மூலம் சீராக்குவார்கள்.
சீரற்ற இதய துடிப்பு பாதிப்பை சீராக்குவதற்கு கடந்த தசாப்தத்தில் இதயத்தின் இரண்டு அறைகளிலும் நுட்பமான வயர்களை செலுத்தி, அதனூடாக வெப்ப அதிர்வலையை உண்டாக்கி.. இதயத்துடிப்பை சீரமைப்பர். ஆனால் தற்போது வளர்ச்சியடைந்த மருத்துவ தொழில்நுட்பத்தின் காரணமாக சீரற்ற இதயத் துடிப்பு பாதிப்பிற்கு காரணமான பகுதியை துல்லியமாக அவதானித்து, அங்கேயே அட்வான்ஸ் எலக்ட்ரோட் பிளேஸ்மென்ட் எனும் ஃபேஸ் மேக்கர் கருவியை நவீன சிகிச்சை மூலம் பொருத்தி இதயத்துடிப்பை சீரடையச் செய்கிறார்கள்.
வைத்தியர் முரளிதரன் தொகுப்பு அனுஷா.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM