இன்றைய சூழலில் அரசாங்க ஊழியராக பணியாற்றினாலும்... தனியார் நிறுவனத்தில் குறைந்த ஊதியத்தில் வேலைக்காரராக பணியாற்றினாலும்... பகுதி நேர தொழில் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். ஏனெனில் மாத சம்பளத்திற்கு பணியாற்றுபவர்களுக்கு கூடுதல் வருவாய் என்பது இருக்காது.
ஆனால் தொழில் துறையில் அதாவது தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தன வரவு என்பது தடையின்றி இருக்கும். இவர்களால் பொருளாதார சூழல் எப்படி இருந்தாலும்... அதனை எளிதாக எதிர்கொள்ள இயலும்.
இந்நிலையில் ஊழியர்கள் பலரும் உடனடியாக நிதி உதவி கிடைக்கிறதே என்பதற்காக எதைப்பற்றியும் திட்டமிடாமல் தங்களுக்கு தெரிந்த தொழிலில் இறங்கி விடுவார்கள்.
தொழிலில் உள்ள சூட்சமம் இவர்களுக்கு எளிதாக கைவர பெறாததால்... நஷ்டத்தை எதிர்கொண்டு தோல்வியை தழுவுகிறார்கள். இந்த தருணத்தில் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சில தாந்த்ரீக பரிகாரங்களை மேற்கொண்டால்... வெற்றி கிடைக்கும் என்று பரிந்துரை செய்திருக்கிறார்கள்.
எந்த தொழிலை தொடங்குவதற்கு முன் முதலில் குலதெய்வ வழிபாட்டையும் , அதனைத் தொடர்ந்து இஷ்ட தெய்வ வழிபாட்டையும் மேற்கொள்ள வேண்டும். இதில் ஏதேனும் குறைகளை வைத்திருந்தால்.. முதலில் அதனை நிவர்த்தி வேண்டும்.
அதனைத் தொடர்ந்து தேய்பிறை அஷ்டமி தினத்தன்று அருகில் உள்ள கடலில் நீராட வேண்டும். உடனே எம்மில் சிலர் நான் இருக்கும் பகுதியில் பகுதிக்கு அருகே கடல் இல்லை என குறிப்பிடுவர்.
அருகே ஓடும் நதி இருந்தால் அங்கும் நீராடலாம். நதியும் இல்லை என்றால்... நீங்கள் இருக்கும் திசையிலிருந்து மூன்று பக்கங்களில் நாற்பது கிலோமீற்றர் தொலைவிற்கு அப்பால் உள்ள ஊரில் கிடைக்கும் நீரை வாங்கி வந்து, குறிப்பிட்ட தேய்பிறை அஷ்டமி தினத்தன்று நீராட வேண்டும். இத்தகைய நீராடலை தொடர்ந்து மூன்று மாதங்கள் மேற்கொண்டால்... உங்களுடைய தொழிலில் ஏற்பட்ட மாய தடைகள் விலகி, லாபம் வரத் தொடங்கும்.
இதனை செயல்படுத்துவதில் ஏதேனும் நடைமுறை அசௌகரியங்கள் இருந்தால்... உங்களது வீட்டிற்கு அருகே உள்ள ஆலயத்தில் அந்த ஆலய நிர்வாகத்தாரின் அனுமதியுடன் ஆலய வளாகத்தில் ஓர் இரவு தங்கி, அடுத்த நாள் காலையில் நீராடி, அங்குள்ள இறைவனுக்கு அர்ச்சனை செய்திட வேண்டும். இதனை ஒரு முறை செய்தால் போதும் உங்களுடைய தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
தொகுப்பு : சுபயோக தாசன்















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM