தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் விக்ரம் பிரபு கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் 'சிறை' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதியை பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'சிறை' எனும் திரைப்படத்தில் விக்ரம் பிரபு, எல். கே. அக்ஷய் குமார், அனந்தா, அனிஷ்மா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக விசாரணை கைதியை காவல் அதிகாரி ஒருவர் - சிறையிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் பயணத்தை மையமாகக் கொண்ட இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித் குமார் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டுத் திகதியை படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் டிசம்பர் மாதம் 25ஆம் திகதியன்று நத்தார் பண்டிகையன்று படமாளிகையில் வெளியாகிறது.
இதனிடையே மறைந்த இயக்குநர் ஆர். சி. சக்தி இயக்கத்தில், 1984 ஆம் ஆண்டில் 'சிறை' எனும் பெயரில், ஒரு திரைப்படம் வெளியாகி, விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பாரிய வெற்றியை பெற்றிருக்கிறது என்பதும் அதே பெயரில் தற்போது விக்ரம் பிரபு - தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமாரின் வாரிசான எல். கே. அக்ஷய் குமார் ஆகியோர் நடிப்பில் வெளியாகும் இந்த திரைப்படமும் வெற்றி பெறும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM