வாக்குமூலத்தில் குறிப்பிட்ட விடயங்களை வெளிப்படுத்தியமை கீழ்த்தரமானது - விமல் வீரவன்ச கடும் சாடல்

11 Oct, 2025 | 03:51 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இலங்கையில் உள்ளது ஸ்ரீ லங்கா பொலிஸா அல்லது மக்கள் விடுதலையின் பொலிஸா என்ற சந்தேகம் தோற்றம் பெற்றுள்ளது. ஸ்ரீ லங்கா பொலிஸ் மிக கீழ்த்தரமான முறையில் செயற்படுகிறது. எதிர்க்கட்சிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் அடக்குமுறைகளின் பிரதானியாகவே  பொலிஸ்டமா அதிபர் செயற்படுகிறார். வாக்குமூலத்தின் விடயங்களை பொலிஸ் திணைக்களம் வெளிப்படுத்தியமை வன்மையாக கண்டிக்கத்தக்கது என என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைமை காரியாலயத்தில்  சனிக்கிழமை (11) நடைபெற்ற ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் விசாரணை குறித்து பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தின் விடயங்களை ஊடகங்களுக்கு பொலிஸ் திணைக்களம் பகிரங்கப்படுத்தியுள்ளமை இதுவே முதன்முறையாகும்.

தண்டனைச் சட்டக்கோவையின் 110(3) பிரகாரம் ஏதேனும் வாக்குமூலம் குறித்து பொலிஸாருக்கு வழங்கும் வாக்குமூலத்தின் இரகசியம் பாதுகாக்கப்பட வேண்டும்.

இலங்கையில் உள்ளது ஸ்ரீ லங்கா பொலிஸா அல்லது மக்கள் விடுதலையின் பொலிஸா என்ற சந்தேகம் தோற்றம் பெற்றுள்ளது. ஸ்ரீ லங்கா பொலிஸ் கடந்த காலங்களில் இவ்வாறு செயற்பட்டதில்லை.மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் பொலிஸ் சேவையை பொலிஸ்மா அதிபர் அரசியல்மயப்படுத்தியுள்ளார்.

 போதைப்பொருள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் தங்காலை பொலிஸார் என்னை அழைத்து வாக்குமூலம் பெற வேண்டிய அவசியம் கிடையாது.

அந்த நபருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையிலான தொடர்பையே வெளிப்படுத்தினேன்.ஊடகங்களுக்கு அதனையே வெளியிட்டேன்.

ஸ்ரீ லங்கா பொலிஸ் மிக கீழ்த்தரமான முறையில் செயற்படுகிறது. எதிர்க்கட்சிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் அடக்குமுறைகளின் பிரதானியாகவே  பொலிஸ்டமா அதிபர் செயற்படுகிறார். அரசாங்கத்தின்  முறைகேடான செயற்பாட்டை தொடர்ந்து வெளிப்படுத்துவேன். பொலிஸாரை கொண்டு எம்மை அச்சுறுத்த முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

11 இந்திய மீனவர்கள் கைது!

2025-11-10 16:35:49
news-image

நுவரெலியாவில் வெளிநாட்டு உருளைக்கிழங்கு இறக்குமதிக்கு எதிராக...

2025-11-10 16:48:30
news-image

சிறைச்சாலைக்குள் சொகுசாக இருக்கும் கைதியின் காணொளி...

2025-11-10 16:24:58
news-image

காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு!

2025-11-10 15:47:14
news-image

வடக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளர் ...

2025-11-10 15:43:40
news-image

பெருந்தோட்ட சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த...

2025-11-10 15:14:44
news-image

update : தலாவ பஸ் விபத்தில்...

2025-11-10 16:16:43
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ;...

2025-11-10 13:29:34
news-image

தமிழர்களுக்கான அதிகாரப் பரவலாக்கம் நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும்...

2025-11-10 13:28:54
news-image

அரசியல் தீர்வும் பொறுப்புக் கூறலும் :...

2025-11-10 15:16:29
news-image

தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து ;...

2025-11-10 15:01:12
news-image

யாழ். நெடுந்தீவில் கைதான 29 இந்திய...

2025-11-10 14:56:40