வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலய அலங்கார உற்சவத்தின் பத்தாம் திருவிழாவான சமுத்திர தீர்த்த திருவிழா வெள்ளிக்கிழமை (10) நாகர்கோவில் இந்து சமுத்திரத்தில் இடம்பெற்றது.
முன்னதாக காலை 3:30 மணியளவில் பிரணவக்குருக்கள் தலமையில் வசந்தமண்டப பூசைகள் இடம்பெற்று, 4:30 மணியளவில் ஆலயத்திலிருந்து புறப்பட்ட நாகதம்பிரான் 5:00 மணியளவில் சமுத்திரத்தை வந்தடைந்து, பல நூற்றுக்கணக்கான பக்கதர்கள் சூழ சமுத்திர தீர்தமாடல் இடம் பெற்றது.
ஆலயத்தின் பிற்பகல் இடம்பெறும் கேணித் தீர்த்த உற்சவத்துடன் திருவிழா நிறைவடைந்தது.
இரவிரவாக இடம் பெற்ற சிறப்பு பூசைகளில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், அம்பன் பிரதேச வைத்தியசாலை என்பன மருத்துவ சேவைகளை வழங்கின.
பருத்தித்துறை பிரதேச சபை சுகாதார வசதிகளையும், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் நிர்வாக ஒழுங்குகளையும் மேற்கொண்டிருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.
சனிக்கிழமை (11) திருவிழாவில் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் பங்கேற்றிருந்தனர்.























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM