சீனப் பொருட்களுக்கு நவம்பர் 1 முதல் 100% கூடுதல் வரி: டிரம்ப் அறிவிப்பு

Published By: Digital Desk 1

11 Oct, 2025 | 10:47 AM
image

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அடுத்த மாதம் முதல் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

மேலும், முக்கியமான மென்பொருளின் மீதும் அமெரிக்கா ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்கும் என அவரது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நவம்பர் மாதம் முதலாம் திகதிமுதல் இந்த வரிவிதிப்பு அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சீன பொருட்கள் மீது 30% வரி அமலில் இருக்கும் நிலையில் தற்போது சீனா மீது 130% வரி விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்காவின் முக்கிய மென்பொருட்களுக்கான ஏற்றுமதியில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ட்ரம்பின் இந்த நடவடிக்கைகளால் சீனா – அமெரிக்க வர்த்தகப் போர் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம், முன்னைய பதிவில், அரிய மண் தாதுக்களின் ஏற்றுமதிக்கான விதிகளை கடுமையாக்கும் பெய்ஜிங்கின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுத்து, சீனா மிகவும் விரோதமாக மாறி வருவதாகவும், உலகை சிறைப்பிடிக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடனான சந்திப்பிலிருந்து விலகுவதாகவும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த வருட ஆரம்பத்தில் டொனால்ட் டிரம்ப்; சீனப் பொருட்களுக்கான வரிகளை உயர்த்தியதனால், பெய்ஜிங் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை கடுமையாக்கியபோது, பொருட்களை நம்பியிருந்த பல அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து எதிர்ப்பு எழுந்தன.இதனால், அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான போர்டு நிறுவனம் உற்பத்தியை தற்காலிகமாக இடைநிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நான் இந்தியாவுக்குச் செல்வேன் - ட்ரம்ப்...

2025-11-07 16:00:42
news-image

தாய்லாந்தில் பிரபஞ்ச அழகிப் போட்டி -...

2025-11-07 15:27:34
news-image

கல்மேகி புயலின் தாக்கம் - பிலிப்பைன்ஸ்,...

2025-11-07 14:10:04
news-image

கல்மேகி புயலில் சிக்கி பிலிப்பைன்ஸில் உயிரிழந்தவர்களின்...

2025-11-07 13:42:55
news-image

உலகிலேயே ஒரு ட்ரில்லியன் டொலருக்கு சொந்தக்காரராகும்...

2025-11-07 12:38:54
news-image

ஒரு குழந்தையின் தாய் எறும்பு பயத்தால்...

2025-11-07 03:11:10
news-image

மெக்சிக்கோ ஜனாதிபதியிடம் அத்துமீறி முத்தமிட முயன்ற...

2025-11-06 13:32:30
news-image

"நிறைய இழக்க நேரிடும்" - மம்தானிக்கு...

2025-11-06 13:29:51
news-image

போஸ்னியா முதியோர் இல்லத்தில் தீவிபத்து: 11...

2025-11-06 12:45:24
news-image

'நாசா' தலைவராக எலான் மஸ்க் ஆதரவாளர்...

2025-11-06 12:07:03
news-image

கல்மேகி சூறாவளியால் 114 பேர் பலி...

2025-11-06 11:24:25
news-image

நியூயோர்க் நகரின் மேயராக ஸோஹ்ரான் மம்தானி...

2025-11-05 12:05:31