(நெவில் அன்தனி)
இலங்கையில் கால்பந்தாட்ட விளையாட்டின்மீது சிறார்களின் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்து அவர்களது ஆற்றல்களை மேம்படுத்தும் உயரிய நொக்குடன் மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியகம் ஏற்பாடு செய்துள்ள 12 வயதுக்குட்பட்டவர்களுக்கான சம்மேளனக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் 14 வயதுக்குட்பட்ட மற்றும் 16 வயதுக்குட்பட்ட வீரர்களைக் கொண்ட கால்பந்தாட்டப் பயிற்சியக அணிகளுக்கு இடையிலான போட்டியை வெற்றிகரமாக நடத்திய ஒகஸ்டின் ஜோர்ஜை ஸ்தாபகத் தலைவராகவும் தலைமைப் பயிற்றுநராகவும் கொண்ட மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியகம் இந்த வருடம் ஏற்பாடு செய்துள்ள இரண்டாவது போட் டி இதுவாகும்.
சிறார்கள் மத்தியில் கால்பந்தாட்ட ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும் நொக்கத்துடன் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமரின் உதவியுடன் போட்டிகள் சிலவற்றை மின்னொளியில் நடத்தவுள்ளதாக ஒகஸ்டின் ஜோர்ஜ் தெரிவித்தார்.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமரின் ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளுடன் மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியகத்தினால் நடத்தப்படும் இப் போட்டியில் 15 கால்பந்தாட்டப் பயிற்சியகங்களைச் சேர்ந்த 16 அணிகள் நான்கு குழுக்களில் பங்குபற்றுகின்றன.
முன்னாள் தேசிய வீரர்களான செபமாலைநாயகம் ஞானரூபன், அவரது இளயை சகோதரர் ஜூட் சுபன் ஆகியோர் பயிற்றுவிக்கும் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்டார் ஈக்ள்ஸ் கால்பந்தாட்டப் பயிற்சிக அணியும் இப் போட்டியில் பங்குபற்றுகின்றமை விசேட அம்சமாகும்.
குழுக்கள்
ஏ குழு: களனி, கலம்போ எவ்.சி., பார்சிலோனா, மென்செஸ்டர் (ஊதா) ஆகிய கால்பந்தாட்டப் பயிற்சியங்கள்.
பி குழு: கலம்போ கிக்கர்ஸ், பிறிலியன்ட், கலம்போ யூத், மென்செஸ்டர் (இளஞ்சிவப்பு) ஆகிய கால்பந்தாட்டப் பயிற்சியகங்கள்.
சி குழு: ஜாவா லேன், ஜுவென்டஸ், ஹென்றி பேதிரிஸ், தி ட்ரவலர்ஸ் ஆகிய கால்பந்தாட்டப் பயிற்சியகங்கள்.
டி குழு: பலாங்கொடை குவார்ட்ஸ், திஹாரிய யுனைட்டட், செஸ்டா, கிளிநொச்சி ஸ்டார் ஈக்ள்ஸ் ஆகிய கால்பந்தாட்டப் பயிற்சியகங்கள்.
இப் போட்டிக்கு ACIT சர்வதேச நிறுவனம் பிரதான அனுசரணை வழங்குகிறது.
இலங்கையில் கால்பந்தாட்டப் பயிற்சியகங்களுக்கு இடையிலான போட்டிக்கு சர்வதேச நிறுவனம் ஒன்று அனுசரணை வழங்குவது இதுவே முதல் தடவையாகும்.
இப் போட்டிக்கான கிண்ண அறிமுகம், அனுசரணை வழங்கல் மற்றும் ஊடக சந்திப்பு என்பன கால்பந்தாட்ட இல்ல கேட்போர்கூடத்தில் வெள்ளிக்கிழமை (10) காலை நடைபெற்றது.
இந்த வைபவத்தில் பேசிய ACIT அதிபர் மொஹமத் ஷொய்ப், 'இலங்கையில் விளையாட்டுத்துறைக்கு மட்டுமல்ல சகலதுறைகளுக்கும் ஒத்துழைப்பு நல்க எமது நிறுவனம் காத்திருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக சமூகங்ளில் போதைப் பொருள் என்ற சொல் கலைந்தெறியப்படவேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எமது முக்கிய நோக்கமாகும். அத்துடன் ஐக்கியத்தை கட்டியெழுப்புவதையும் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதையும் குறிக்கோளாகக் கொண்டு எமது நிறுவனம் செயற்பட்டுவருகிறது' என்றார்.
இதேவேளை, 'கால்பந்தாட்டத்தின் மூலம் ஒற்றுமை, ஆர்வத்தால் வழகாட்டுதல் என்பதற்கு அமைய சிறுவர்கள் மத்தியில் கால்பந்தாட்டத்தை ஊக்குவித்து அவர்களை எதிர்கால கால்ந்தாட்ட நடசத்திரங்களாக ஆக்கும் நோக்கத்துடன் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் செயல்படுகிறது. சம்மேளனக் கிண்ணப் போட்டி மூலம் எதிர்கால திறமைசாலிகளை இனங்காணக் கூடியதாக இருக்கும். இம் முறை வட பகுதியிலிருந்து ஒரே ஒரு அணி பங்குபற்றுகிறது. அது வரவேற்கத்தக்கத்து. வட பகுதியில் கால்பந்தாட்டத்தில் ஆர்வம் செலுத்தி வரும் சிறார்களை மகிழ்வித்து அவர்களது திறமைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் வகையில் விரைவில் யாழ்ப்பாணத்தில் கால்பந்தாட்டப் பயிற்சியகங்களுக்கு இடையிலான கால்பந்தாட்டப் போட்டி நடத்தப்படும்' என சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் தெரிவித்தார்.
இது இவ்வாறிருக்க, 'இளம் சிறாறர்கள் கால்பந்தாட்டத்தில் இலட்சியக் கனவுகளுடன் முன்னேற்றத்தை நோக்கி செல்லவும் எண்ணிய இலக்கை அடையவும் செய்வதற்கான மிகச் சரியான சுற்றாடலை ஏற்படுத்திக்கொடுப்பபதை பிரதான நோக்கமாகக் கொண்டே சம்மேளனக் கிண்ணப் போட்டியை ஏற்பாடு செய்துள்ளோம்." என ஒகஸ்டின் ஜோர்ஜ் தெரிவித்தார்.
'இந்தப் போட்டியை நடத்துவதற்கு சம்மேளனத் தலைவர் அனுமதி வழங்கியதையிட்டு அவருக்கு நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன். சம்மேளனக் கிண்ண கால்பந்தாட்டம் வெறும் சுற்றுப் போட்டியல்ல. ஒழுக்கம், கூட்டுமுயற்சி, வாழ்நாள் முழுவதும் விளையாட்டை நேசிக்கும் மனோபக்குவம் ஆகியவற்றுக்கான அடித்தளமாகவும் இப் போட்டி அமைகிறது. வெளிநாட்டு வீரர்களுடன் உள்ளூர் சிறார்கள் விளையாடி சிறந்த அனுபவத்தை பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பேன். வருட இறுதியில் வெளிநாடுகளின் கால்பந்தாட்டப் பயிற்சியகங்களையும் உள்ளடக்கிய சர்வதேச போட்டி ஒன்றை நடத்த மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சிகம் திட்டமிட்டுள்ளது' என ஒகஸ்டின் ஜோர்ஜ் மேலும் கூறினார்.
இலங்கையில் முன்னணி கால்பந்தாட்டப் பயிற்சியகங்களில் ஒன்றான மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியகத்தினால் நடத்தப்படும் இந்த சுற்றுப் போட்டியில் பல பரிசுகளும் வழங்கப்படவுள்ளது.
முதல் சுற்று முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் நொக் அவுட் சுற்றில் விளையாட தகுதிபெறும்.
சம்பியனாகும் அணிக்கு சம்மேளனக் கிண்ணத்துடன் தங்கப் பதக்கங்களும் ஒரு இலட்சம் ரூபா பணப்பரிசும் வழங்கப்படும்.
இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பெறும் அணிகளுக்கு கிண்ணங்களுடன் பதக்கங்கள் (வெள்ளி, வெண்கலம்) வழங்கப்படும். லீக் சுற்றில் ஒவ்வொரு குழுவிலும் முதலிடங்களைப் பெற்ற அணிகளுக்கும் கிண்ணங்கள் வழங்கப்படும். அத்துடன் பங்குபற்றும் சகல அணிகளினதும் வீரர்களுக்கு அவர்களது பெயர்களுடன் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இதனை விட ஒவ்வொரு போட்டியிலும் ஆட்ட நாயகன் தெரிவு செய்யப்பட்டு கிண்ணம் வழங்கப்படும்.
அத்துடன் சுற்றுப் போட்டியில் அதிசிறந்த வீரர், அதிசிறந்த கோல்காப்பாளர், நேர்த்தியான விளையாட்டு (Fair Play), அதிக கோல்களைப் போட்ட வீரர், இறுதி ஆட்டநாயகன் ஆகிய விருதுகளும் வழங்கப்படும்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM