வட மாகாண விவசாய அமைச்சின் கீழ் இயங்கும் தமிழர் பாரம்பரிய உணவகமான "அம்மாச்சி" உணவகத்திற்கு சிங்கள மொழிப்பெயர் வைக்க வேண்டும் என அழுத்தங்கள் விடுக்கப்படுவதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி . விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
வட மாகாண விவசாய அமைச்சினால் தமிழர் பாரம்பரிய உணவகமான "அம்மாச்சி" உணவகம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த நிலையில் "அம்மாச்சி" உணவகத்தை யாழ் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் விஸ்தரிக்கும் நோக்கில் வட மாகாண சபையினால் மத்திய அரசிடம் நிதி கோரப்பட்டிருந்த நிலையிலேயே மத்திய அரசு மேற்படி நிபந்தனையை விதித்ததாக வட மாகாண சபை முதலமைச்சர் தெரிவித்தார்.
இது குறித்து வட மாகாண முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
“அரசு பணம் தருவதால் சிங்களப்பெயர் ஒன்றை முற்று முழுதாக தமிழர் பாரம்பரிய உணவகத்திற்கு வைப்பது எந்த வகையிலும் நியாயமான செயலல்ல என்றும் குறித்த செயலானது தமிழரின் தனித்துவத்தையும் உரிமையையும் அழிக்கும் செயல் என்றும் "அம்மாச்சி" உணவகத்திட்டத்திற்காக ஆரம்பத்தில் அரசிடம் நிதி உதவி கேட்கும் போதே அரசாங்கம் இத்தகையதோர் நிபந்தனையை விதித்திருந்தால் அந்த சந்தர்ப்பத்திலேயே அரசினது நிதி உதவி வேண்டாம் என்று மறுத்திருப்போம்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM