கிராமிய இசை ரசிகர்களை கவரும் 'காளமாடன் கானம்'

10 Oct, 2025 | 03:14 PM
image

துருவ் விக்ரம் - மாரி செல்வராஜ்-  நிவாஸ் கே. பிரசன்னா கூட்டணியில் தயாரான 'பைசன் காளமாடன்' படத்தில் இடம்பெறும் 'காளமாடன் கானம் 'எனும் பாடலும், பாடலுக்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

தமிழ் சினிமாவின் தனித்துவமான படைப்பாளியான மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பைசன் காளமாடன்' எனும் திரைப்படத்தில் துருவ் விக்ரம், பசுபதி, அமீர், லால், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், அழகம் பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கே. எழில் அரசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருக்கிறார். தமிழகத்தின் தென் பகுதியில் ஒடுக்கப்பட்ட மக்களின் கபடி வீரரின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

எதிர்வரும் 17 ஆம் திகதியன்று தீபாவளி விருந்தாக வெளியாகும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற 'சாம கூட தொடங்கிடுச்சு ராசா.. நல்லா சங்கெடுத்து ஊதுங்கையா ராசா..' என தொடங்கும் பாடலும், பாடலுக்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த பாடலை பாடலாசிரியர் மாரி செல்வராஜ் எழுத, பின்னணி பாடகர் வி. எம். மகாலிங்கம் பாடியிருக்கிறார். கிராமிய இசை பின்னணியில் உருவான இந்தப் பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.

இதன் காரணமாகவே இந்த பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில் திரையிடப்பட்டது...

2025-11-08 20:24:43
news-image

இயக்குநர் ராஜமவுலி இயக்கும் புதிய திரைப்படத்தின்...

2025-11-08 18:20:39
news-image

குளோபல் ஸ்டார்' ராம் சரண் நடிக்கும்...

2025-11-08 18:18:09
news-image

நடிகர் உதய் தீப் நடிக்கும் 'சாவு...

2025-11-08 18:16:39
news-image

நடிகர் உதய் தீப் நடிக்கும் 'சாவு...

2025-11-08 18:15:52
news-image

இயக்குநர் சீனு ராமசாமி - நடிகர்...

2025-11-08 18:06:32
news-image

சிறு தெய்வ வழிபாட்டின் பின்னணியை விவரிக்கும்...

2025-11-08 17:43:36
news-image

மீண்டும் வெளியாகும் சேரனின் 'ஆட்டோகிராப் '

2025-11-08 17:34:16
news-image

அருண் விஜய் நடிக்கும் ' ரெட்ட...

2025-11-08 17:26:28
news-image

அதர்ஸ் - திரைப்பட விமர்சனம்

2025-11-07 17:43:23
news-image

புதுமுக நடிகர் மதி நடிக்கும் 'கும்கி...

2025-11-07 17:13:13
news-image

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'பராசக்தி' படத்தில் முதல்...

2025-11-07 16:59:16