வேடுவன் - இணைய தொடர் விமர்சனம்

10 Oct, 2025 | 02:37 PM
image

வேடுவன் - இணைய தொடர் விமர்சனம்

ஒளிபரப்பு : ஜீ 5 டிஜிட்டல் தளம்

வெளியீட்டு திகதி: 10/10/ 2025

தயாரிப்பு : ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட்

நடிகர்கள் : கண்ணா ரவி, சஞ்சீவ் வெங்கட், சிரவ்நிதா ஸ்ரீகாந்த், வினுஷா தேவி, ஜீவா ரவி மற்றும் பலர்.

இயக்கம் : பவன்

மதிப்பீடு : 2.5/5

'அயலி', 'தலைமைச் செயலகம்', 'விலங்கு', 'ஆட்டோ சங்கர்', 'சட்டமும் நீதியும்' என டிஜிட்டல் தள ரசிகர்களிடம் பாரிய வரவேற்பை பெற்ற ஜீ 5 ‌டிஜிட்டல் தளம் வழங்கும் அசல் தமிழ் இணையத் தொடரின் வரிசையில் புதிதாக ஓக்டோபர் 10 ஆம் திகதி முதல் வெளியாகிறது 'வேடுவன்' எனும் கிரைம் திரில்லர் வகைமையிலான இணைய தொடர்.  ஏழு அத்தியாயங்களை கொண்ட இந்தத் தொடர் டிஜிட்டல் தள பார்வையாளர்களை பரபரப்புடன் தொடர்ந்து காணச் செய்ததா? இல்லையா? என்பதை காண்போம்.

தமிழ் திரையுலகில் சூரஜ் ( கண்ணா ரவி) எனும் பிரபலமான நட்சத்திர நடிகர் தொடர் தோல்வி படங்களை வழங்கி, சமூக வலைதள பக்கங்களில் வெளியாகும் எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல்.. நடிப்பிற்கு தற்காலிகமாக இடைவெளி விட்டு, பிறகு தொடரலாம் என எண்ணி இருக்கும் தருணத்தில் ஒரு இயக்குநர் ரகசிய காவல் அதிகாரியின் சுயசரிதை ஒன்றை திரைக்கதையுடன் விவரிக்கிறார்.

அந்த கதையினால் ஈர்க்கப்படும் நடிகர் சூரஜ் தொடர்ந்து கதையை கேட்டு, அதில் நடிக்க ஒப்புக்கொள்கிறார். ஆனால் ஓரிடத்தில் அவரால் சுயசரிதையில் நடைபெற்றிருக்கும் சம்பவம் குறித்து சந்தேகம் எழ.. அதனால்.. அவரால் தொடர்ந்து நடிக்க இயலாமல் தடுமாறுகிறார்.

இந்தப் படத்தை வெற்றி பெற செய்து விட வேண்டும் என்ற அதீத ஆர்வத்தில் அந்த ரகசிய காவலரின் அசலான வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்.

நடந்த உண்மை சம்பவத்திற்கும், சட்டபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மைக்கும் இடையேயான இடைவெளியை அவர் உணர்கிறார். அதனை நடிப்பில் வெளிப்படுத்துகிறார்.

இந்தத் திரைப்படத்தை ரசிகர்கள் வெற்றி பெற செய்தார்களா? இல்லையா? என்பதையும், அந்த சுயசரிதையில் மறைக்கப்பட்ட விடயம் என்ன ? என்பதையும் விவரிக்கும் வகையில் விறுவிறுப்பாக சொல்கிறது இந்த இணையத் தொடர்.

சூரஜ் எனும் நடிகராகவும், அருண்மொழிவர்மன் என்ற ரகசிய காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்திலும் நடிகர் கண்ணா ரவி தன் முழு உழைப்பையும் வழங்கி டிஜிட்டல் தள ரசிகர்களை வெகுவாக கவர்கிறார்.

காவல்துறையின் உயர் அதிகாரி ஆணைக்கு இணங்க என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டான நாயகன் - சுவராசியத்திற்காக பிச்சைக்காரனாகவும், சமையல் கலைஞராகவும் தோன்றுவது சிறப்பு என்றாலும்... அதற்காக எழுதப்பட்ட திரைக்கதையில் பல லாஜிக் மீறல்கள் இருப்பதால் ரசிகர்களால் ஒரு எல்லைக்கு மேல் பரபரப்புடன் தொடரை காண இயலாமல் தவிக்கிறார்கள்.

காவல்துறை அதிகாரியின் மனைவியாக நடித்திருக்கும் ஷிரவ்னிதா ஸ்ரீகாந்த்-  ஆதிநாதன் என்ற உள்ளூர் மக்களிடத்தில் செல்வாக்கு பெற்ற அரசியல்வாதியாக நடித்திருக்கும் சஞ்சீவ் வெங்கட்- அவரது மனைவி சாந்தி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை வினுஷா தேவி- ஆகியோரும் தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்கியிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு - பின்னணி இசை-  இந்த இரண்டும்... இணைய தொடர் முழுவதும் பரபரப்பாக -விறுவிறுப்பாக - பார்ப்பதற்கு உதவுகிறது.

உரையாடல்கள் பல இடங்களில் தனி கவனத்தை ஈர்க்கிறது. அதிலும் உச்சகட்ட காட்சியில் இயக்குநர் முன் வைத்திருக்கும் 'வாசகம்' ( உண்மைகளை யாரும் நம்புவதில்லை. எல்லோரும் எதை நம்புகிறார்களோ அதுவே உண்மையாகிறது) பார்வையாளர்களை சிந்திக்கத் தூண்டுகிறது. இருப்பினும் பார்வையாளர்கள் எதிர்பார்க்கும் திருப்பமும், சுவராசியமும் சில அத்தியாயங்களில் மட்டும் தான் நிறைவாக இருக்கிறது.

வேடுவன் - புத்திசாலி நடிகன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில் திரையிடப்பட்டது...

2025-11-08 20:24:43
news-image

இயக்குநர் ராஜமவுலி இயக்கும் புதிய திரைப்படத்தின்...

2025-11-08 18:20:39
news-image

குளோபல் ஸ்டார்' ராம் சரண் நடிக்கும்...

2025-11-08 18:18:09
news-image

நடிகர் உதய் தீப் நடிக்கும் 'சாவு...

2025-11-08 18:16:39
news-image

நடிகர் உதய் தீப் நடிக்கும் 'சாவு...

2025-11-08 18:15:52
news-image

இயக்குநர் சீனு ராமசாமி - நடிகர்...

2025-11-08 18:06:32
news-image

சிறு தெய்வ வழிபாட்டின் பின்னணியை விவரிக்கும்...

2025-11-08 17:43:36
news-image

மீண்டும் வெளியாகும் சேரனின் 'ஆட்டோகிராப் '

2025-11-08 17:34:16
news-image

அருண் விஜய் நடிக்கும் ' ரெட்ட...

2025-11-08 17:26:28
news-image

அதர்ஸ் - திரைப்பட விமர்சனம்

2025-11-07 17:43:23
news-image

புதுமுக நடிகர் மதி நடிக்கும் 'கும்கி...

2025-11-07 17:13:13
news-image

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'பராசக்தி' படத்தில் முதல்...

2025-11-07 16:59:16