சுகாதார அமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்து ஆர்ப்பாட்டம் செய்தனர் என்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 3 பல்கலைக்கழக மாணவர்களையும் பிணையில் விடுதலைசெய்யுமாறு கொழும்பு மேல் நீதி மன்றம் இன்று வழங்கிய உத்தரவினடிப்படையிலேயே குறித்த மாணவர்கள் மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.