மருதம் - திரைப்பட விமர்சனம்

10 Oct, 2025 | 02:30 PM
image

மருதம் - திரைப்பட விமர்சனம்

தயாரிப்பு : அருவர் பிரைவேட் லிமிடெட்

நடிகர்கள் : விதார்த், ரக்ஷனா, அருள்தாஸ், ஷரவண சுப்பையா, மாறன், தினந்தோறும் நாகராஜ் மற்றும் பலர்.

இயக்கம் : வி. கஜேந்திரன்

மதிப்பீடு : 2 / 5

சிறிய முதலீட்டு தயாரிப்பாளர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் 'யதார்த்த நாயகன்' விதார்த் நடிப்பில் வெளியாகியிருக்கிறது' மருதம்'.  எளிய மனிதர்களின் போராட்ட மிகுந்த வாழ்வியலை விவரிக்கும் இந்த படைப்பு ரசிகர்களை கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

தமிழகத்தின் வட பகுதியில் அமையப்பெற்றுள்ள கல் புதூர் எனும் சிறிய கிராமத்தில் கன்னியப்பன் ( விதார்த்) எனும் விவசாயி வாழ்ந்து வருகிறார். அவருக்கு மனைவியும், ஒரு ஆண் பிள்ளையும் உண்டு. பிள்ளையை அரசாங்க அனுசரணையுடன் இயங்கும் பாடசாலையில் இலவசமாக கல்வி கற்க விடாமல் .. கட்டணத்துடன் கூடிய தனியார் பாடசாலையில் சேர்க்க கன்னியப்பன் விரும்புகிறார்.

இதற்காக தன் நிலத்தை அப்பகுதி வியாபாரி ஒருவரி( அருள்தாஸ்)டம் அடமானம் வைத்து பணம் வாங்கி, குழந்தையை அந்த பாடசாலையில் சேர்க்கிறார். இந்நிலையில் அவரது நிலத்தில் சிலர் வேலி அமைக்கிறார்கள். இதை கண்டதும் அதிர்ச்சி அடைந்த கன்னியப்பன்.. வேலி அமைத்தவரிடம் சண்டை போடுகிறார்.

ஆனால் அவரோ இந்த நிலத்தை தனியார் வங்கி ஒன்று ஏலத்தில் விட்டதாகவும்.. அதனை நான் வாங்கியதாகவும் கூறுகிறார். குழப்பமடையும் கன்னியப்பன் வங்கிக்கு சென்று விபரம் கேட்டபோது.. அவரது தந்தையின் பெயரில் உள்ள காணியை போலியாக ஆவணங்களை தயாரித்து வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்திருப்பது தெரிய வருகிறது. 

அத்துடன் இது தொடர்பாக ஏற்கனவே விவசாயி ஒருவர்.. உரிய நியாயம் கிடைக்காமல் ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு தீக்குளித்து உயிரிழந்திருக்கிறார் என்ற செய்தி கிடைத்தவுடன்.. இதை எதிர்த்து போராட வேண்டும் என திட்டமிடுகிறார்.

இதற்காக அவர் சட்டத்தரணியான கந்தன் ( தினந்தோறும் நாகராஜ்) என்பவரை சந்திக்கிறார். அவருடைய வழிகாட்டலின் படி இந்த மோசடியை சட்டப்படி எதிர்கொள்கிறார். அவருக்கு வெற்றி கிடைத்ததா? இல்லையா? என்பதே இப்படத்தின் கதை.

காணி மோசடி குறித்து ஏராளமான படைப்புகள் வெளியாகி இருந்தாலும்.. இந்தப் படத்தில் விவசாயி தனது வாழ்வாதாரமான மருத நிலத்தை மோசடியாளர்கள் புது ரூட்டில் ஏமாற்றுகிறார்கள்.

இதனை காட்சி மொழியாகவும்... உரையாடலாகவும் ... பார்வையாளர்களிடம் சரியாக சென்றடைய செய்திருக்கிறார் இயக்குநர்.  இதற்காக அவரை பாராட்டலாம். 

ஆனால் இந்த மோசடியில் பயன்படுத்தப்படும் சட்ட ரீதியான தொழில்நுட்ப வார்த்தைகள் - வெகுஜன பார்வையாளர்களுக்கு புரிந்து கொள்வதில் தடுமாற்றம் ஏற்படுகிறது. குறைகள் இருந்தாலும்... இயக்குநரின் விழிப்புணர்வு நோக்கத்திற்காகவே அதனை கடந்து செல்லலாம்.

தமிழகத்தின் வடப்பகுதியான ராணிப்பேட்டை பகுதி மக்களின் பேச்சு மொழி - கதாபாத்திரங்களில் வழியாக வெளிப்பட்டிருப்பதையும் பாராட்டலாம்.

கன்னியப்பன் கதாபாத்திரத்தில் நடிகர் விதார்த் விவசாயியாகவே வாழ்ந்திருக்கிறார். அவரது மனைவி சிந்தாமல்லி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை ரக்ஷனாவும் கிராமத்து பெண்ணாக இயல்பாக தோன்றி ரசிகர்களை கவர்கிறார்.  இவர்களைக் கடந்து சட்டத்தரணி கந்தனாக நடித்திருக்கும் இயக்குநர் தினந்தோறும் நாகராஜும் ரசிகர்களை கவர்கிறார்.

காணி மோசடி தொடர்பான படைப்பிற்கு தேவையான ஒளிப்பதிவையும் , பின்னணி இசையையும்,  படத்தொகுப்பையும் வழங்கி,  ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது தொழில்நுட்பக் குழு.

மருதம் - மரகதம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில் திரையிடப்பட்டது...

2025-11-08 20:24:43
news-image

இயக்குநர் ராஜமவுலி இயக்கும் புதிய திரைப்படத்தின்...

2025-11-08 18:20:39
news-image

குளோபல் ஸ்டார்' ராம் சரண் நடிக்கும்...

2025-11-08 18:18:09
news-image

நடிகர் உதய் தீப் நடிக்கும் 'சாவு...

2025-11-08 18:16:39
news-image

நடிகர் உதய் தீப் நடிக்கும் 'சாவு...

2025-11-08 18:15:52
news-image

இயக்குநர் சீனு ராமசாமி - நடிகர்...

2025-11-08 18:06:32
news-image

சிறு தெய்வ வழிபாட்டின் பின்னணியை விவரிக்கும்...

2025-11-08 17:43:36
news-image

மீண்டும் வெளியாகும் சேரனின் 'ஆட்டோகிராப் '

2025-11-08 17:34:16
news-image

அருண் விஜய் நடிக்கும் ' ரெட்ட...

2025-11-08 17:26:28
news-image

அதர்ஸ் - திரைப்பட விமர்சனம்

2025-11-07 17:43:23
news-image

புதுமுக நடிகர் மதி நடிக்கும் 'கும்கி...

2025-11-07 17:13:13
news-image

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'பராசக்தி' படத்தில் முதல்...

2025-11-07 16:59:16