புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் புரோட்டான் பீம் தெரபி

10 Oct, 2025 | 02:23 PM
image

புற்றுநோய் பாதிப்புகளை நிவாரணம் அளிக்க தற்போது புரோட்டான் பீம் தெரபி எனும் நவீன சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாகவும், இதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய் பாதிப்பிற்கு முழுமையான நிவாரணத்தை வழங்க இயலும் என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

புற்று நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சத்திர சிகிச்சை - கதிர்வீச்சு சிகிச்சை- கீமோதெரபி ஆகிய சிகிச்சைகள் பலனளித்து வருகிறது. இந்நிலையில் குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய் பாதிப்பிற்கும் , எம்முடைய உடல் உறுப்புகளின் சிகிச்சை அளிப்பதற்கு கடினமானதாக கருதப்படும் மூளை, தண்டுவடம் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பிற்கும் சிகிச்சை அளிப்பதற்காக தற்போது புரோட்டான் பீம் தெரபி எனும் நவீன சிகிச்சை அறிமுகமாகி இருக்கிறது.

புரோட்டான் பீம் தெரபி என்பது ஒரு பிரத்யேக வகையினதான கதிர்வீச்சு சிகிச்சை ஆகும். இது புற்றுநோய் மற்றும் சில புற்றுநோய் அல்லாத கட்டிகளுக்கு சிகிச்சை அளிக்க இதன் சக்தி வாய்ந்த ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது. ஏற்கனவே புற்றுநோயாளிகளுக்கு எக்ஸ் கதிர்களை பயன்படுத்தி கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் புரோட்டான் பீம் தெரபி என்பது செறிவூட்டப்பட்ட துகள்களில் இருந்து புரோட்டான்கள் எனும் நுண் ஆற்றலை பாவிக்கும் புதிய வகையினதான கதிர்வீச்சு சிகிச்சை ஆகும்.

மூளையில் ஏற்படும் கட்டிகள் மற்றும் புற்றுநோய் ,மார்பக புற்றுநோய், குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய், கண், உணவு குழாய், தலை, கழுத்து, கல்லீரல், நுரையீரல், கணையம், பிட்யூற்றரி, புராஸ்டேட், முதுகெலும்பு , மண்டை ஓட்டின் அடிப்பகுதி... ஆகியவற்றில் ஏற்படும் புற்று நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் இந்த புரோட்டான் பீம் தெரபி முழுமையான நிவாரணம் அளிப்பதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

இத்தகைய புரோட்டான் பீம் தெரபி மூலம் வழங்கப்படும் சிகிச்சையானது தற்போது நடைமுறையில் உள்ள கதிர்வீச்சு சிகிச்சையை விட குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டிருக்கின்றன.

புரோட்டான் கற்றைகளை புற்றுநோய்  பாதித்திருக்கும் பகுதியில் வைத்திய நிபுணர்கள் துல்லியமாக நேரிடையாக செலுத்தி அந்த செல்களை அழிக்கிறார்கள்.

மேலும் இத்தகைய சிகிச்சை புற்றுநோயை கட்டுப்படுத்துவதிலும் சிறந்த நிவாரணத்தை அளித்து வருவதாக வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.

வைத்தியர் கௌதமன் தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அழகிய தோற்றப்பொலிவிற்கான நவீன லிப்போசக்சன் ரீடோ...

2025-11-15 17:52:32
news-image

இடுப்பு மாற்று சத்திர சிகிச்சையில் அறிமுகமாகி...

2025-11-14 17:42:14
news-image

நடை பயிற்சிக்கு ஏற்றது எது?

2025-11-13 12:21:39
news-image

புற்று நோயாளிகளுக்கு சென்டினல் நோட் பயாப்ஸி...

2025-11-12 16:08:08
news-image

மைக்ரேன் தலைவலிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-11-11 17:47:30
news-image

பிராடிகினீசியா எனும் மெதுவான இயக்கம் -...

2025-11-10 18:24:20
news-image

பாலிட்ராமா எனும் பாதிப்பிற்குரிய நவீன ஒருங்கிணைப்பு...

2025-11-08 18:11:27
news-image

குறை மாதத்தில் பிறக்கும் பிள்ளையை பாதுகாப்பாக...

2025-11-07 18:22:58
news-image

குறட்டை விடுவதற்கு உடல் எடை அதிகம்...

2025-11-06 16:55:26
news-image

டைப் 2 சர்க்கரை நோய் பாதிப்பிற்கான...

2025-11-04 18:18:49
news-image

மாரடைப்பு பாதிப்பு ஏற்படுமா? என்பதனை அறிய...

2025-11-03 17:30:29
news-image

முதுகெலும்பு பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-11-01 15:03:10