நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரியின் புதிய அதிபராக எஸ்.ரகு அண்மையில் உத்தியோகபூர்வமாக பதவியேற்று கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இவர் முன்னதாக புப்புரஸ்ஸ தமிழ் வித்தியாலயம், கம்பளை இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் அதிபராக சேவையாற்றியுள்ளார்.
கம்பளை இல்லவத்துர ரஹ்மானியா பாடசாலையில் ஆரம்பக் கல்வியை கற்றுள்ளதுடன் நாவலப்பிட்டி கதிரேசன் கனிஷ்ட வித்தியாலயம் மற்றும் நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரியின் பழைய மாணவராவார்.
நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரியின் புதிய அதிபரான எஸ்.ரகு, பேராதனை பல்கலைக்கழகத்தில் இளங்கலைமாணிப் பட்டத்தையும் தேசிய கல்வி நிறுவகத்தில் கல்விமாணிப் பட்டத்தையும் பாடசாலை முகாமைத்துவத்தில் பட்டயப்படிப்பையும் நிறைவு செய்துள்ளதோடு, இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் பட்டமும் பட்டப்பின்படிப்பு தமிழ் டிப்ளோமாவையும் பெற்றுள்ளார்.
இதேவேளை, கல்வி அமைச்சினால் தாய்லாந்தில் ஏற்பாடு செய்யப்பட்ட அதிபர்களுக்கான விசேட வெளிநாட்டு பயிற்சியில் முகாமைத்துவம், நிர்வாக முகாமைத்துவம் தொடர்பான சான்றிதழ் பயிற்சிநெறியையும் பூர்த்தி செய்துள்ளார்.
தனது சேவைப் பயணத்தில் கல்விப்புலம், சட்டத்துறை தொடர்பான ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டுள்ளதுடன் ஆசிரியர் வள நிலையங்களில் வருகைதரு விரிவுரையாளராக கடமையாற்றுகின்றார்.
மத்திய மாகாண சபையினால் வழங்கப்படும் சிறந்த அதிபர்களுக்கான ஷில்பா அபிமானி விருதுகளை இரு முறை பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM