நாடளாவிய ரீதியில் உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸ் பரிசோதகர்கள் உள்ளிட்ட 58 பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடியாக அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபரின் பரிந்துரையின் கீழ் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன் பொலிஸ் அதிகாரிகளுக்கு திடீர் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளது.

இடமாற்றம் வழங்கப்பட்டோரில் 5 உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் 21 பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் 32 பொலிஸ் பரிசோதகர்கள் உள்ளடங்கியுள்ளனர்.