பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் அவர்களின் இயற்கை பற்றிய ஆவணப்படம் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் வெளியிடப்பட உள்ளது.
“ஃபைண்டிங் ஹார்மனி: எ கிங்ஸ் விஷன்” (Finding Harmony: A King’s Vision) என தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள இந்த முழுநீள ஆவணப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் திரையிடப்படும் என கிங்ஸ் அறக்கட்டளை அறிவித்துள்ளது.
மன்னர் சார்ல்ஸ், “நமது பூமியை பாதுகாக்கவும், அதனுடனான உறவை மீண்டும் நிலைநாட்டவும் உலகம் ஒருங்கிணைந்த முயற்சி மேற்கொள்வது இதுவரை இவ்வளவு அவசியமானதாக இருந்ததில்லை” எனக் கூறியுள்ளார்.
ஆவணப்படத்தில், நிலைத்தன்மைக்கான தனது பல தசாப்தங்களாக நீடித்து வரும் பிரச்சாரங்களைப் பற்றி மன்னர் பகிர்ந்துகொள்வார்.
அவர் மேலும்,
“இந்த ஆவணப்படம் புதிய பார்வையாளர்களை நல்லிணக்கத்தின் தத்துவத்தை அறிய ஊக்குவிக்கும். நிலையான எதிர்காலத்தை உருவாக்கும் எனது உறுதிப்பாட்டைப் போலவே, அவர்களையும் அதற்காக ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன்,” என தெரிவித்தார்.
“என் வாழ்நாளின் பெரும்பகுதியில், இயற்கைக்கு எதிராக அல்லாது அதனுடன் இணைந்து செயல்படக்கூடிய வழிகளை உருவாக்க முயன்றுவருகிறேன். மன அழுத்தத்தில் இருக்கும் நமது பூமியின் சமநிலையை மீட்டெடுக்குதல் என் நோக்கம்,” என்றும் அவர் கூறினார்.
மனிதர்கள் “இயற்கையிலிருந்து பிரிந்தவர்கள் அல்ல, அதனுடைய ஒரு பகுதியாக இருக்க வேண்டும்” என்றும், இயற்கையுடனான ஆரோக்கியமான உறவு “மனித நல்வாழ்வின் மையத்தில்” இருக்கிறது என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
உலகம் முழுவதிலும் உள்ள எடுத்துக்காட்டுகளின் மூலம், விவசாயம், பாரம்பரிய கைவினை, கட்டிடக்கலை, நகரத் திட்டமிடல் போன்ற துறைகளில் நல்லிணக்க தத்துவத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என்பதை ஆவணப்படம் வெளிப்படுத்தும்.
“கயானாவின் காடுகளிலிருந்து இந்தியாவின் நிலையான சமூகங்கள் வரை, மேலும் டம்ஃப்ரைஸ் ஹவுஸ் மற்றும் ஹைக்ரோவில் உள்ள கிங்ஸ் அறக்கட்டளையின் பணிகள் வரை – உலகெங்கும் நல்லிணக்கத்திற்காக நடைபெறும் முயற்சிகளை இந்த ஆவணப்படம் பிரதிபலிக்கும்,” என மன்னர் குறிப்பிட்டுள்ளார்.
King's Foundation
ஆவணப்பட இயக்குனர் நிக்கோலஸ் பிரவுன்,
“இயற்கையுடனான நல்லிணக்கத்திற்காக மன்னர் மேற்கொண்ட வாழ்நாள் போராட்டத்தின் ஆழத்தை உலகம் முழுவதும் சிலரே உண்மையாக அறிந்துள்ளனர்,” என தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் குளோசெஸ்டர்ஷையர் ஹைக்ரோவில் நடைபெற்ற மன்னரின் முதல் நல்லிணக்க மாநாட்டை இந்த ஆவணப்படம் பதிவு செய்துள்ளது. அந்த மாநாட்டில் உலகின் பல பகுதிகளில் இருந்து பழங்குடி தலைவர்கள் கலந்து கொண்டு, இயற்கையுடன் இணக்கமாக வாழும் தங்கள் பாரம்பரிய அறிவை பகிர்ந்தனர். மாநாட்டின் தொடக்கத்தில் மன்னர் அவர்களுடன் இணைந்து தீச் சடங்கு ஒன்றை நடத்தி, இயற்கைக்கு மரியாதை செலுத்தினார்.
மன்னரின் நகர வடிவமைப்பு மற்றும் நல்லிணக்கம் பற்றிய கருத்துக்கள், இங்கிலாந்தில் புதிய தலைமுறை நகரங்கள் உருவாகும் சிந்தனையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM