நுகேகொடை பகுதியில் உள்ள விடுதியொன்றில் உள்ள நீச்சல் தடாகத்தில் மூழ்கி 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சிறுவன் படித்து வந்த முன்பள்ளி பாடசாலையின் உப அதிபர் உட்பட ஏழு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த 8 ஆம் திகதி காலை மிரிஹான, ஸ்டென்லி மாவத்தையில் உள்ள விடுதியொன்றில் இடம்பெற்றுள்ளது.
அன்றையதினம் ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளரின் வழிகாட்டுதலின் கீழ் சிறுவர்கள் நீச்சல் தடாகத்தில் நீந்திக் கொண்டிருந்த போது, சிறுவன் நீரில் மூழ்கியுள்ளார்.
நீச்சல் தடாகத்தில் இருந்து மீட்கப்பட்ட சிறுவன் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிறுவனின் பிரேத பரிசோதனை நேற்று வியாழக்கிழமை (9) இடம்பெற்றதோடு, இந்த சம்பவம் தொடர்பாக முன்பள்ளி பாடசாலையின் உப அதிபர் விளையாட்டு ஒருங்கிணைப்பு அதிகாரி, இரண்டு ஆசிரியர்கள், ஆரம்ப பாடசாலையின் ஊழியர் மற்றும் இரண்டு நீச்சல் பயிற்றுனர்கள் உட்பட 7 பேர் மிரிஹான பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM