பாதாள உலகக்குழு தலைவராக அறியப்படும் பிரபள போதைப்பொருள் கடத்தல் காரரான சலிந்து மல்ஷிக என்னும் குடு சலிந்துவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த சந்தேகநபர் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றமை தொடர்பில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போதே நீதவான் இவ்வாறு உத்தரவிட்டிருந்தார்.
பாதாள உலகக்குழு தலைவராக அறியப்படும் பிரபள போதைப்பொருள் கடத்தல் காரரான சலிந்து மல்ஷிக என்னும் குடு சலிந்து குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் சந்தேகநபர் பிணை நிபந்தனைகளை மீறி சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேற்படி வழக்கு விசாரணை வியாழக்கிழமை (9) கொழும்பு நீதவான் அசங்க எஸ் போதரகம தலைமையில் இடம்பெற்றிருந்தது. இது தொடர்பில் நீதிமன்றத்துக்கு விளக்கமளித்திருந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சார்பில் ஆஜரான விசாரணை அதிகாரிகள், சந்தேகநபர் 2019. 5.19 ஆம் திகதி போலி ஆவணங்களை சமர்ப்பித்து பெறப்பட்ட கடவுச்சீட்டை பயன்படுத்தி வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்றதுடன், 2019.6.5 ஆம் திகதி குறித்த கடவுச்சீட்டை பயன்படுத்தியே மீள நாடு திரும்பியிருந்தார்.
அத்தோடு இதேமுறையைில் 2020.10.2 ஆம் திகதி மீள வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று நாடு திரும்பியிருந்தார். சந்தேகநபர் படபெதிகே தொன் சந்துன் லக்மால் என்னும் பெயரில் தாயரிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் போலி தேசிய அடையாள அட்டை ஆகியவற்றை பயன்படுத்தி போலி கடவுச்சீட்டை தயாரித்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் வழங்கிய தகவலுக்கமைய இவ்விடயம் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் நீதிமன்றத்துக்கு தெரிவித்திருந்தனர்.
தற்போது சந்தேகநபர் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுள்ளதாகவும் சந்தேகம் எழுந்துள்ளதுடன் இது தொடர்பில் சர்வதேச பரஸ்பர ஒத்துழைப்பு சட்டத்தின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளதாகவும் நீதிமன்றத்துக்கு அறிவித்திருந்தனர்.
அதிகாரிகளால் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை பரிசீலனை செய்த நீதவான் சந்தேகநபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு தெரிவித்து பிடியாணை பிறப்பித்திருந்தார். மேலும் பிணையாளர்களுக்கு அறிவித்தல் அனுப்பி வைப்பதோடு, இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM