மேஷம்
வாழ்க்கை வளமாக வாழ்வதற்கே என உணர்ந்து செயல்படும் மேஷ ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் செவ்வாய் உங்களின் ராசியை பார்வை இடுவது சிறப்பான நற்பலன்களை பெற்று தரும். குருவின் பார்வை இடும் இடங்கள் சிறப்பாக அமையும். சொந்த தொழில் செய்து வருபவர்களுக்கு வீண் அலைச்சலும், விரயமும் உண்டாகும்.
உங்களின் ராசிக்கு விரயாதிபதி குரு மூன்றில் மறைந்திருந்தாலும் ராசிநாதனையும், சந்திரனையும், சனியையும் பார்ப்பது உங்களின் சகல காரியங்களுக்கும் ஊக்கம் தருவதுடன் பொருளாதார வளத்தையும் பெற்று தருவார். எனினும் வீண் அலைச்சலும், செலவீனமும் உண்டாகும் என்பதால் அத்தியாவசியமான செலவுகளை தவிர பிறவற்றை தவிர்ப்பது நல்லது.
சுகஸ்தானாதிபதி சூரியன் ஆறில் அமர்ந்து எதிரிகளிடமிருந்து விடுதலை பெறும் சூழ்நிலையை தருவார். ஏழுக்குரிய சுக்கிரன் ஐந்தில் அமர்வது கலைத்துறையினருக்கு நல்ல வருமானத்தையும், அந்தஸ்தையும் பெற்று தருவார். கலை உலக பாராட்டுகளை பெறுவீர்கள். பல நாட்கள் தயங்கிய உங்களின் காதலை சொல்லி, அதில் வெற்றிப் பெறுவீர்கள். விளையாட்டு வீரர்களுக்கு சரியான பயிற்சியுடன் சுயமுயற்சியும் சேர்ந்து மேன்மை அடைவார்கள். எதையும் மனதில் வைத்து கொள்ளாமல் உங்களில் முழுமையான கவனத்தையும் சொந்தங்கள், உறவுகளுடன் செலவழித்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் உண்டாகும். துணிச்சல் அதிகரிக்ககூடும்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
ஒரெஞ்ச், வெண்மை, சிவப்பு.
அதிர்ஷ்ட திசைகள்:
கிழக்கு, தெற்கு, தென்மேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
செவ்வாய், ஞாயிறு, திங்கள்.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
23-10-2025 வியாழன் இரவு 10.02 முதல் 26-10-2025 ஞாயிறு காலை 09.32 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
செவ்வாய், வெள்ளி கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்து வீட்டிற்கு முன் மஞ்சள் நீர் தெளித்து கோலமிட்டு நெய் விளக்கு ஏற்றி பழம் வைத்து வேண்டிக் கொள்ள சகல காரியமும் வெற்றியை தரும்.
ரிஷபம்
சோதனை காலங்களில் துணிச்சலுடன் செயல்படும் ரிஷப ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு தன ஸ்தானத்தில் குரு அமர்ந்தும் சுகஸ்தானத்தில் ராசிநாதன் அமர்ந்து தொழில் ஸ்தானத்தை பார்ப்பது உங்களின் தொழிலில் இருந்த தடைகளை நீக்கி வளம் பெறுவீர்கள். யாரையும் நம்பி கொண்டிருக்காமல் சரியான பாதையை தெரிவு செய்து பயணம் செய்வீர்கள்.
சுகஸ்தானாதிபதி சூரியன் பஞ்சமாதிபதி வீட்டில் அமர்வதும் லாபஸ்தானத்தை பார்ப்பதும் அரசு துறையில் பணிபுரிபவருக்கு அதிகார மாற்றம் உண்டாகும். சிலருக்கு காலியிடங்களில் தகுதி அடிப்படையின்றி அந்த சில பொறுப்புகளை ஏற்று செய்ய வேண்டி இருக்கும். உங்களுக்கு அறிமுகமானவர்களுக்கு தகுந்தபடி பதவிகள் கிடைக்கும். எதையும் கூட்டு முயற்சி மூலம் தெளிவாக செய்து முடிப்பீர்கள்.
தொழில் ஸ்தானத்தில் சனியுடன் ராகு இணைந்திருந்து குரு பார்வை பெறுவதால் சில தொழில்களில் இருந்த தடைகள் நீங்கும். நீதிமன்ற வழக்குகள் சாதகமான உத்தரவு பெற வாய்ப்பு அமையும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி கொள்வீர்கள். கலைத்துறையினருக்கு நல்ல அறிமுகம் கிடைக்கும். புதிய சந்திப்புகள் மூலம் வாய்ப்புகளை பெறுவீர்கள். சிலருக்கு இதுவரை இருந்த தொழிலாளர் பிரச்சனைகள் இனி முடிவுக்கு வரும். அரசியல்வாதிகளுக்கு மக்களின் மத்தியில் நல்ல அபிப்பிராயம் இருக்கும். உங்களை நன்கு புரிந்து கொண்டு உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். பணபுழக்கம் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
வெண்மை, மஞ்சள், நீலம்.
அதிர்ஷ்ட திசைகள்:
தெற்கு, தென்கிழக்கு, வடக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
வெள்ளி, சனி, ஞாயிறு.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
26-10-2025 ஞாயிறு காலை 09.33 முதல் 28-10-2025 செவ்வாய் இரவு 07.30 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
செவ்வாய் கிழமைகளில் சுப்ரமணியருக்கு சிவப்பு நிற பூ வைத்து துவரை அன்னம் நைவேத்தியம் செய்து நெய் தீபமிட்டு வேண்டிக் கொள்ள அனைத்து காரியமும் நினைத்தபடி கைகூடும்.
மிதுனம்
எடுத்த செயலில் முழுமையாக கவனம் செலுத்தும் மிதுன ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு பஞ்சமஸ்தானத்தில் ராசிநாதன் புதன் அமர்ந்து லாபஸ்தானத்தை லாபாதிபதி செவ்வாயுடன் பார்ப்பதும் சந்திரன் பார்வை குருவுக்கும் ராசிக்கும் அமைவதும் எதிர்பாராத தனவரவுகள் வந்து சேரும். குடும்ப விருத்திக்கு வழிவகுக்கும்.
ராசியில் ஜென்ம குருவாக இருந்து ராசிநாதனுடன் லாபாதிபதி செவ்வாயையும் பார்ப்பது மிக நல்ல பலனை பெற்றுத் தரும். எதை செய்ய கூடாதோ அதை செய்யாமல் தவிர்த்து, சிறிது காலம் தள்ளிப் போடுவது நல்லது. இனி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் நிலையை சரி செய்து கொள்வீர்கள். யாரிடமும் வீணான வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. எந்த இடத்தில் தேவையற்ற பிரச்சனை வந்தாலும் அந்த இடத்தில் உங்களுக்கு உதவி செய்ய ஒருவர் வந்து அந்த இடத்தில் உங்களை காப்பாற்றி விடுவார்.
உஷ்ணம் சார்ந்த உடல் உபாதைகள் வர வாய்ப்புள்ளதால் முடிந்த அளவு உணவு பழக்கங்களையும், பாதுகாப்பான பயணத்தையும் உறுதி செய்து கொள்வது நல்லது. மூன்றாமிட கேது உங்களுக்கு அதிக துணிச்சலை தருவார். உங்கள் தந்தையிடம் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படலாம். அல்லது தந்தைக்கு மருத்துவ செலவு வரலாம். இது மாதிரி சில தடைகள் வர வாய்ப்புள்ளதால் சற்று நிதானமான போக்கு நல்லது. கலைத்துறை சார்ந்த பணிகளில் மூன்னேற்றம் உண்டாகும். கவனச்சிதறல் ஏற்படும் என்பதால் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. தொழிலில் மந்த நிலை நீடிக்கும். பணம் தாராளமாக புழங்கும்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
பச்சை, ஒரெஞ்ச், மஞ்சள்.
அதிர்ஷ்ட திசைகள்:
மேற்கு, வடமேற்கு, கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
புதன், வியாழன், திங்கள்.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
01-10-2025 புதன் பகல் 12.07 முதல் 03-10-2025 வெள்ளி இரவு 07.24 மணி வரையும்.
28-10-2025 செவ்வாய் இரவு 07.31 முதல் 31-10-2025 வெள்ளி அதிகாலை 03.08 மணி வரையும்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடு செய்து வெற்றிலையில் ஜெய் ஸ்ரீராம் எழுதி மாலை கட்டி போட்டு நெய் தீபம் ஏற்றி வேண்டிக் கொள்ள சகல கஷ்டங்களும் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள்.
கடகம்
கருத்தாழமிக்க சிந்தனை கொண்டு செயற்படும் கடக ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் சந்திரன் ஆறாமிடத்தில் அமர்ந்து விரைய குருவை பார்ப்பதும், தனஸ்தானத்தில் இலாபாதிபதியுடன் கேது இணைவதும், உங்களின் மனவலிமையும், பொருளாதார வளர்ச்சியையும் தடைபடுத்தும் என்பதால் புதிய முயற்சிகளுக்கு தற்சமயம் தடை விதித்து கொள்வது நல்லது.
உங்களின் ராசிக்கு இம்மாதம் 08-10-2025 அன்று முதல் குரு அதிசாரமாக ராசிக்குள் பிரவேசம் செய்து அவரின் சொந்த நட்சத்திரமான புனர்பூசத்தில் இருப்பதால் உங்களுக் இதுவரை தடைகளாக இருந்த பல பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வரும் வரும் என்று எதிர்பார்த்த நிதிகள் பல காலமாக தாமதப்பட்ட நிலைமாறி உடனடியாக பண வரவு வர ஆரம்பிக்கும். எதை செய்வது என்று குழப்பம் நீடித்த நிலைமாறி, அதிலிருந்து விடுபடுவீர்கள். அட்டமசனி பார்வை இருந்தாலும் அதனை இதுவரை குரு பார்வை பெற்றதால் பாதிப்பின்றி இருந்தது. இனி அதிசார காலம் வரை சற்று புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது.
நீங்கள் பணிபுரியுமிடத்தில் உங்களுக்கு தற்காலிக சலுகைகள் கிடைக்கும். எதிர்பாராத புனித யாத்திரை சென்று வருவீர்கள். உடல் நலமின்றி இருந்த உங்களுக்கு சுறுசுறுப்பான பலம் கிடைக்கும். வருமானத்திற்கு அதிகமான செலவு வந்தாலும் அதனை சரி செய்து கொள்ளும் வாய்ப்பைப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு நல்ல வருமானம் கிடைக்கும். சிலருக்கு திடீர் வரன் அமையும். அரசியலில் இடம் பொருள் பார்த்து நடந்து கொள்வீர்கள். யாருக்கும் பிணயம் இடுவதை தவிர்ப்பது நல்லது. முன் யோசனை அவசியம்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
வெண்மை, ஒரெஞ்ச், மஞ்சள்.
அதிர்ஷ்ட திசைகள்:
வடக்கு, வடமேற்கு, கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
திங்கள், செவ்வாய், வெள்ளி.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
03-10-2025 வெள்ளி இரவு 07.25 முதல் 05-10-2025 ஞாயிறு இரவு 12.24 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
ஞாயிறுகளில் ராகு காலத்தில் பைரவர் வழிபாடு மூன்று நல்லெண்ணெய் தீபமேற்றி நவகிரகங்களை ஒன்பது சுற்று சுற்றி வேண்டிக் கொண்டு வர வரும் துன்பம் பறந்து போகும்.
சிம்மம்
தனக்கென்று கொள்கையை வகுத்து செயல்படும் சிம்ம ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் தன ஸ்தானத்தில் அமர்ந்து எட்டாமிடத்தை பார்ப்பதும் பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்து குருவை பார்ப்பதும் குரு சந்திர யோக பலனைக் கிடைக்க பெறுவீர்கள். இனி எதையும் பற்றி யோசிக்காமல் களத்தில் இறங்கி விளையாட ஆரம்பித்து விடுவீர்கள். அரசியலில் சிம்ம சொப்பனமாக இருப்பீர்கள்.
லாபஸ்தானத்தில் குரு இருந்து ஏழாமிடத்தை பார்ப்பதும் இனி 08-10-2025 முதல் அதிசார குரு எட்டாமிடத்தை பார்ப்பதால் எதிர்பாராத நன்மைகள் தேடி வரும். வரும் காலம் சிறப்பாக அமையும். குடும்பத்தில் இருந்து வந்த சச்சரவுகள் நீங்கும். வருமானத்திற்கு தகுந்தபடி உங்களின் குடும்பத்தை நடத்த பழகிக் கொள்வீர்கள். சிலர் புதியதாக முயற்சி செய்து வருவாயை பெருக்கிக் கொள்வீர்கள். காலத்தையும், நேரத்தையும் வீணடிக்கமாட்டீர்கள். ராசியில் கேது இருப்பது உஷ்ண சம்மந்தமான உபாதை உண்டாகும்.
ஏழாமிடத்தில் சனி, ராகு சேர்க்கை ராசியை பார்ப்பது உங்களின் கூட்டாளிகளின் மூலம் வந்த தடைகள் நீங்கி மேன்மை பெறுவீர்கள். எதிலும் கவனம் செலுத்தி பலன் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் வந்து அமையும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எதை சாதிக்க எண்ணிணீர்களோ அதை அடையும் முயற்சியை கடைசி வரை விடமாட்டீர்கள். கொண்ட கொள்கை.. செய்த செயல்கள்.. அனைத்தும் வெற்றி பெற பாடுபடுவீர்கள். வைத்தியர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். திட்டமிட்டபடி எல்லாம் நல்ல படியாக அமையும்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
சிவப்பு, ஒரெஞ்ச், மஞ்சள்.
அதிர்ஷ்ட திசைகள்:
கிழக்கு, தெற்கு, தென்கிழக்கு,
அதிர்ஷ்ட கிழமைகள்:
ஞாயிறு, திங்கள், வியாழன்.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
05-10-2025 ஞாயிறு இரவு 12.25 முதல் 08-10-2025 புதன் அதிகாலை 05.41 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரையும். பைரவரையும் தொடர்ந்து வழிபட்டு தீபம் ஏற்றி வேண்டிக் கொள்ள அனைத்து காரியமும் விரைவில் நடக்கும்.
கன்னி
தன் கனவுகளை நனவாக்க துணிவுடன் செயல்படும் கன்னி ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு தனஸ்தானத்தில் ராசிநாதன், ராசிநாதனை பார்ப்பதால் பொருளாதாரத்தில் மேன்மையும் செய்யும் தொழிலில் விருத்தியும் பெறுவீர்கள். தடைகளை தகர்த்து.. தன்னிகரில்லா செயல்பாடுகளை ஊக்கபடுத்தும் நேர்மையுடன் இருக்க வேண்டுமென்று எண்ணும் உங்களின் செயல் பாராட்டுக்கு உரியதாக அமையும்.
ராசிநாதன் அட்டமாதிபதியுடன் இணைவதால் உங்களின் ஆவணங்கள் எதையும் தொலைந்து விடாமல் பார்த்துக் கொள்வது மிக மிக அவசியமாகும். எதை செய்தாலும் அதிலுள்ள நுணுக்கங்களை ஆராய்ந்து செயல்படும் உங்களின் செயல் மேன்மை அடையும். ராசியில் சூரியன் அமர்ந்து தைரியத்தையும். மன வலிமையும் தருவார். அரசியலில் நல்ல ஆலோசனை தரக்கூடியவராக இருப்பீர்கள். தன்னை பற்றி அவதூறாக யார் சொன்னாலும் அதன் ரிஷிமூலத்தை அறிந்து கொள்வீர்கள். பதவிக்காக எதையும் செய்யாமல் பாடுபடுவீர்கள்.
கலைத்துறையினருக்கு வீண் அலைச்சல் இருக்கும். தூக்கமின்மை, உடல் அசதிகள் வந்து சில நேரம் துன்பம் தரும். போட்டிகளால் வரும். கஷ்டங்களை சவாலாக எடுத்து செய்து வெல்வீர்கள். ஓன்லைன் வர்த்தகம், நிதி துறை சார்ந்தவர்கள் ஆக்கப்பூர்வமான வேலையைச் செய்வீர்கள். முக்கிய பிரமுகர் சந்திப்பு உங்களை வளம் பெற செய்யும். கருத்துகளை வெளிபடுத்தும் போது துணிச்சலாக சொல்வீர்கள். இம்மாத இறுதியில் உங்களின் சகல கஷ்டங்களும் நீங்க சரியான வழி கிடைக்க பெறுவீர்கள். சாது போல் இருந்து சாதுர்யமாக செயல்படுவீர்கள். பண புழக்கம் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
பச்சை, மஞ்சள், சிவப்பு.
அதிர்ஷ்ட திசைகள்:
தெற்கு, தென்மேற்கு, கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
புதன், வியாழன், ஞாயிறு.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
08-10-2025 புதன் அதிகாலை 05.42 முதல் 10-10-2025 வெள்ளி காலை 06.06 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
ஞாயிறு கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கை அம்மன் வழிபாடு செய்து நெய் தீபமேற்றி சிவப்பு நிற பூ வைத்து வேண்டிக் கொள்ள சகல காரியமும் சிறப்பாக நடக்கும்.
துலாம்
எதை செய்தாலும் அதற்கு ஒரு அர்த்தம் சொல்லும் துலாம் ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் சுக்கிரன் லாப ஸ்தானத்தில் அமர்ந்து பஞ்சம ஸ்தானாதிபதியை பார்ப்பதால் உங்களின் எண்ணம் போல நல்ல வாழ்க்கை அமையும். சுபிட்சமான சூழ்நிலைகள் உருவாகும். குறைவின்றி வாழ உறுதியுடன் இருக்க உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
உங்களின் ராசியில் பாக்கியாதிபதி அமர்ந்து குரு பார்வை பெறுவது உங்களின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிப்பார். கடந்த கால நிகழ்வுகள் போல் இல்லாமல் நினைத்தபடி சகல காரியமும் வெற்றியை தரும். யாருக்கும் கிடைக்காத பல நற்காரியங்களும் தற்செயலாக நடக்கும். பூர்வீக சொத்துகள் சார்ந்த சில வேலைகளை துவங்குவீர்கள். உங்களின் யோகாதிபதி சனியின் பார்வை ராசிநாதன் மீது படுவது அரசு சார்ந்த காரியங்களில் நல்ல அனுபவம் பெறுவீர்கள். சிலருக்கு அரசு சார்ந்த உத்தரவுகள் கிடைக்க பெறுவீர்கள்.
தொழில் ஸ்தானாதிபதி சந்திரன் உங்களின் முயற்சிகளுக்கு குரு பார்வையின் பலன்களால் இம்மாதம் முழுவதும் நல்ல பலன்கள் கிடைக்க பெற்று, தொழில்களுக்கு வரும் காலத்தில் சுமூகமான சில காரியம் நடக்கும். உங்களின் கூட்டு முயற்சிகள் நல்ல பலனை பெற்று தரும். களத்திரகாரகன் ராசியில் அமர்வது சிலருக்கு திருமண யோகங்கள் அமையும். வீட்டில் சிறு பெண் பிள்ளை இருந்தால் பூப்படையும் வாய்ப்புகள் அமையும். காத்திருந்த காலம் மறைந்து, வெற்றி பாதையில் பயணிக்கும் வாய்ப்பை பெறுவீர்கள். அரசியலிலும், பொது வாழ்விலும் உங்களுக்கு நல்ல மரியாதை கிடைக்கும். புதிய வாகனம் வாங்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
வெண்மை, மஞ்சள், ஒரெஞ்ச்.
அதிர்ஷ்ட திசைகள்:
மேற்கு, வடமேற்கு, தெற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
வெள்ளி, சனி, செவ்வாய்.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
10-10-2025 வெள்ளி காலை 06.07 முதல் 12-10-2025 ஞாயிறு காலை 08.34 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
செவ்வாய்க்கிழமை நரசிம்மர் வழிபாடும், வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாடும் செய்து, நெய் தீபமேற்றி, தொடர்ந்து வழிபட்டு வர, உங்களின் தொழில், உத்தியோகம் சிறப்பாக அமையும்.
விருச்சிகம்
உழைப்பால் உயர வேண்டுமென்று எண்ணும் விருச்சிக ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் விரையஸ்தானத்தில் அமர்ந்து இருப்பதும் தொழில் ஸ்தானாதிபதி சூரியன் லாபஸ்தானத்தில் அமர்ந்திருப்பதும் செய்யும் தொழிலே தெய்வமென்று கடமையை செய்து பலன் தானே வரும் என்று உணர்ந்து செயல்பட்டவர்களுக்கு இறைவன் நல்ல பலனை பெற்று தருவார்.
உங்களின் ராசிக்கு இதுவரை குரு அட்டம ஸ்தானத்தில் அமர்ந்து இருப்பதும் வரும் 08-10-2025 முதல் அதிசாரமாக பாக்கியஸ்தானத்திற்கு வருவது உங்களின் ராசியை பார்ப்பதும் உங்களின் சகல வித கஷ்டங்களிலிருந்து விடுபட்டு மேன்மை அடைவீர்கள். விரையாதிபதி சுக்கிரன் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து இருப்பது உங்களின் வெளிநாட்டு தொழில் வாய்ப்பு நல்ல பலனை பெற்று தரும். துணிச்சலுடன் எதையும் செய்வீர்கள். கஷ்டம் வரும் போது அது பற்றி கவலைபடாமல் தன் கடமையை செய்து நற்பலன் பெறுவீர்கள்.
பணியாளர்களுக்கு வேலை பளு இருக்கும். அதற்கு தகுந்தபடி உங்களின் உடலை சரி செய்து கொள்வீர்கள். எதிரிகளிடம் அதிகம் பேசுவதை குறைத்து கொள்வீர்கள். தொழிற்சங்க தலைவர்கள் விடாமுயற்சி மூலம் பல நற்செயல்களை பெற்று தருவார்கள். முதலீடு இல்லாத தொழில் செய்வதன் மூலம் ஆதாயம் கிடைக்கும். தாயார் உடல்நலனை பாதுகாக்க வேண்டி வரும். உங்களின் அன்றாட தேவைகளுக்கு பண வரவு இருக்கும். உங்களின் யோகாதிபதி சந்திரன் தன ஸ்தானத்தில் இருப்பது பொருளாதார புழக்கம் நல்ல நிலையில் இருக்கும். இறை தொண்டுகளையும் விரும்பி செய்வீர்கள். தர்ம காரியங்களில் ஈடுபாடு கொண்டு பொருள் உதவி, உடல் உழைப்பையும் தந்து இறை அருள் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
சிவப்பு, வெண்மை, மஞ்சள்.
அதிர்ஷ்ட திசைகள்:
வடக்கு, கிழக்கு, வடமேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
ஞாயிறு, திங்கள், வியாழன்.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
12-10-2025 ஞாயிறு காலை 08.35 முதல் 14-10-2025 செவ்வாய் கிழமை பகல் 11.58 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
செவ்வாய்க்கிழமை சுப்ரமணியருக்கு சிவப்பு வண்ண பூ வைத்து நெய் தீபமிட்டு, நவகிரக வழிபாடு செய்து மூன்று நல்லெண்ணெய் தீபம் ஏற்று, வேண்டிக்கொள்ள அனைத்து காரியமும் வளம் பெறும்.
தனுசு
தன்னுடைய கொள்கைகளிலிருந்து மாறாத குணம் கொண்ட தனுசு ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் குருவின் பார்வை பெறுவதும் யோகாதிபதி சூரியன் தொழில் ஸ்தானத்தில் அமர்வதும் உங்களை ஊக்கபடுத்தி வளம் பெற செய்யும். காரியங்களையும் செயலாக மாற்றி வேசமாக செயல்படுவீர்கள். ராசியில் அட்டமாதிபதி சந்திரன் அமர்ந்தாலும் குரு பார்வை பெறுவது நற்பலனை பெற்று தரும்.
லாபஸ்தானத்தில் தொழில் ஸ்தானாதிபதியுடன் செவ்வாய் அமர்ந்து தொழிலில் எதிர்பாராத நற்பலன்களை பெற்று தருவதால் கிடைக்க வேண்டிய சலுகைகளை கேட்டு பெறுவீர்கள். இம்மாதம் தீபாவளி பண்டிகையை குடும்பத்துடன் சிறப்பாக கொண்டாடுவீர்கள். அதிசார குரு அட்டம ஸ்தானத்தில் அமர்வதால் சற்று கொடுக்கல், வாங்கலில் கவனமுடன் இருப்பது நல்லது. யாருக்கு பிணையம் இடுவதை தவிர்ப்பது நல்லது. பாக்கியஸ்தானத்தில் சுக்கிரன் அமர்ந்திருப்பது உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக அமையும்.
தன்னை சார்ந்த பலருக்கு உதவி செய்வதில் சிறந்தவராக இருப்பீர்கள். இதனால் பல கஷ்டங்களை அடைய வேண்டி வரும். துணையாக யாரும் இல்லை என்றாலும் கூட அவருக்காக தன்னை வருத்திக் கொள்ளும் நிலை வரும். கலைத்துறையினருக்கு நல்ல வருமானம் கிடைக்கும். கொடுத்த இடத்தில் பணம் தாமதமாக வரும். ஒன்பதிற்குரியவன் பத்தில் அமர்ந்தால் ஏதாவது தர்மம் செய்ய வேண்டி வரும். எளிய மக்களுக்கு உதவி செய்வீர்கள். பொது நலன் கருதி நீங்கள் எடுக்கும் முடிவிற்கு அனைவரின் ஆதரவு கிடைக்கும். எது சரியோ அதை செய்வீர்கள். சுமையாக எதையும் கருதாமல் உடனே அதனை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் கடமை தவறாமல் பணி செய்வீர்கள். பிறருக்கு தீங்கு விளைவிப்பது பாவம் என்ற கொள்கையை கடைசி வரை கடைபிடித்து வாழ்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
மஞ்சள், வெண்மை, ஒரெஞ்ச்.
அதிர்ஷ்ட திசைகள்:
கிழக்கு, வடகிழக்கு. தெற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
வியாழன், வெள்ளி, ஞாயிறு.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
14-10-2025 செவ்வாய் பகல் 11.59 முதல் 16-10-2025 வியாழன் மாலை 05.07 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமை ஆஞ்சநேயர் வழிபாடு செய்து வெற்றிலை மாலை இட்டு வேண்டிக் கொள்ள உங்களின் தடைகள் முழுமையாக நீங்கி நன்மை பெறுவீர்கள்.
மகரம்
சொல்லியபடி செய்து கட்டும் குணம் கொண்ட மகர ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் சனி தனஸ்தானத்தில் அமர்ந்து யோகாதிபதி சுக்கிரன் பார்வை பெறுவது உங்களின் தொழில், உத்தியோகம் சிறக்க வழி கிடைக்கும் தரும். வளமையுடன் செயல்பட்டால் எல்லாம் சிறப்பாக அமையும். எதிலும் முன்யோசனையும் துணிச்சலும் கொண்டு செயல்படுவது நல்லது.
உங்களின் தொழில் ஸ்தானத்தில் செவ்வாயும் புதன் இணைவு பெறுவதும் போட்டிகளை சந்திக்கும் நிலை உண்டாகும். லாபத்தை கருதாமல் வியாபாரம் நடக்க வேண்டுமென்று நிலைத்து விற்பனையை அதிகபடுத்துவீர்கள். உழைப்பவருக்கு முக்கியத்துவம் தந்து வளம் பெற செய்ய உதவிகளை செய்வீர்கள். மற்றவருக்கு உதவும் குணம் கொண்ட உங்களின் பண்பு பாராட்டும்படி அமையும். கற்பனை செய்தபடி வாழ்ந்து வந்த உங்களின் வாழ்க்கையில் இனி நீச ஸ்தானத்தில் கேதுவுடன் சுக்கிரன் இருப்பதால் பெண்களிடம் பழகும் போது சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
உங்களின் எண்ணம் போல தர்மங்கள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். கோவில்களிலும், பொது விழாக்களிலும் உங்களின் சார்பில் வழங்கப்படும் அன்னதானம் பிறருக்கு ஆச்சரியத்தை உண்டாக்கும். முன்ஜென்ம கர்ம பாவங்களை நீக்கி கொள்ள புனித பார்வை ராசிக்கு வருவதால் செயல்பாடுகளில் உச்சமான பலன்களை இம்மாத இறுதியில் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்க பெறும். சிலருக்கு அதிகபடியான செலவுகள் வரும். முதலீடு இல்லாத தொழில் செய்பவருக்கு நல்ல லாபம் கிட்டும். இதுவரை பட்ட துன்பம் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள். எதிர்காலத்தில் ஏற்றம் பெறுவீர்கள். மருத்துவ காப்பீடு செய்து கொள்வீர்கள். வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
மெரூன், பச்சை, சிவப்பு.
அதிர்ஷ்ட திசைகள்:
தெற்கு, தென்கிழக்கு, மேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
சனி, ஞாயிறு, புதன்.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
16-10-2025 வியாழன் மாலை 05.08 முதல் 18-10-2025 சனி இரவு 12.37 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
வியாழன், வெள்ளி, கிழமைகளில் விநாயகர் வழிபாடு செய்து அருகு மாலை, எருக்கு மாலை அணிவித்து இரண்டு தேங்காய் எண்ணெய் தீபமிட்டு, அரிசி மாவு பிட்டு செய்து, வேண்டி கொள்ள சகல காரியமும் அனுகூலமாகும்.
கும்பம்
குறுகிய காலத்தில் எதையும் செய்து முடிக்கும் கும்ப ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு சனி ராசியில் அமர்வதும் குரு பார்வை பெறுவதும் சின்ன விடயத்தில் கூட நன்மை கிடைக்கும். அரசியலிலும், தனி மனித செல்வாக்குகளிலும் உங்களின் நிலை உயரும். எதை செய்தால் சரியாக இருக்கும் என்று நினைத்து செய்கிறீர்களோ அதை சரியாக செய்து முடிப்பீர்கள். சந்தேகத்தை ஏற்படுத்திக் கொண்டால் அது சரியான தீர்வை தராது.
ஜென்ம ராகு உடல் நலனையும் மன நலன்களையும் பாதிக்க செய்யும் என்றாலும், குரு பார்வை பெறுவதால் சற்று குறையும். 8ந் திகதி முதல் அதிசார குரு வந்த பின்பு மீண்டும் மனகுழப்பம் உண்டாகும். அரசியல் தந்திரங்களை பிறருக்கு கற்றுக் கொடுப்பீர்கள். அவர்கள் அதை பயன்படுத்தி தன்னை மேம்படுத்தி கொண்டு உங்களை மறந்து விடுவார்கள். குடும்ப பாரம் பெரிது என்றாலும்.. அதனை நீங்கள் சுமக்கும் கட்டாயம் வராது. கலைத்துறையினருக்கு நல்ல வருமானம் கிடைக்கும். திருவிழா பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வருமானம் ஒரு பங்கு செலவு இரண்டு பங்கு என்று எதிலும் சில சிரமம் உண்டாகும். எளிதில் சமாளித்து விடுவீர்கள்.
லாபஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்து குரு பார்வை பெறுவது தொழிலிலும், உத்தியோகத்திலும் பண புழக்கமும். உங்களுக்கு ஆதாயமும் பெற்று தரும். வங்கியில் இருப்பு அதிகரிக்கும். மாத இறுதியில் செலவு வந்து இருப்பு குறையும். அத்தியாவசியமான செலவுகளை தவிர மற்றவற்றை தவிர்த்து விடுவது நல்லது. பாக்கியஸ்தானத்தில் தொழில் ஸ்தானாதிபதி செவ்வாயும் அட்டமாதிபதி புதன் இணைவு பெறுவது தொழிலில் சில சிரமம் இருந்தாலும் உங்களின் தனி திறமையான சரி செய்து கொள்வீர்கள். எதையும் எடுத்தேன் கவிழ்தேன் என்று இல்லாமல் சரியாக முன் யோசனையுடன் செயல்பட்டு வெற்றியை காண்பீர்கள். அன்றாடம் அழியும் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் அதிக முதலீடுகளை தவிர்த்து, குறைவாக லாபம் கிடைத்தாலும் போதும் என்று முதலீடை குறைத்து கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறங்கள்:
நீலம், வெள்ளை, சிவப்பு.
அதிர்ஷ்ட திசைகள்:
மேற்கு, தென்மேற்கு, வடக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
சனி, ஞாயிறு, திங்கள்.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
18-10-2025 சனி இரவு 12.38 முதல் 21-10-2025 செவ்வாய் காலை 10.32 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
வியாழக்கிழமை காலை 06 - 07 மணிக்குள் விநாயகர் வழிபாடு தேங்காய் எண்ணெய் விளக்கேற்றியும். ஞாயிறு மாலை ராகு காலத்தில் பைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமிட்டு தயிர் அன்னம் வைத்தும் வேண்டி வர சகல காரியமும் வெற்றியை தரும்.
மீனம்
அன்பாலும் ஆதரவாலும் அனைவரிடம் பழகும் மீன ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் சுகஸ்தானத்திலிருந்து பார்க்குமிடம் சிறப்பாக அமையும். உங்களின் ராசியை சூரியன் பார்வை இடுவது மனவலிமையும், செயல்திறனும் அதிகரிக்கும். எதையும் அவசரபட்டு செய்யமாட்டீர்கள். கருத்துகளை சொல்லும் போது அதில் ஆழமாக எதையும் சொல்வீர்கள். புதிய திட்டங்களை கவனமுடனும், ஆலோசனைகளுடனும் செய்வீர்கள்.
சூரியனை தவிர்த்து பிற கிரகங்கள் அனைத்தும் மறைவு ஸ்தானங்களில் மறைவு பெறுவதும் உங்களின் செயல்பாடுகளில் முடக்கம் உண்டாகும். எதற்கும் பிறரின் உதவியை நாட வேண்டிவரும். ஒரு செயலை செய்யும் போது அதற்கு தகுந்த வழிகளை ஆய்வு செய்யாமல்… குற்றம் சொல்லி கொண்டிருக்காமல்… இருப்பது நல்லது. 8-ந் திகதி முதல் அதிசார குரு உங்களின் ராசியை பார்ப்பது உங்களுக்கு மேலும் ஊக்கத்தை தரும். எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும். உடல் நலனின் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் சந்தோசம் நினைத்தபடி சில காரியம் நடந்த மகிழ்ச்சி உங்களை ஊக்கபடுத்தும்.
கலைத்துறையினருக்கு இம்மாதம் மிக சிறப்பாக இருக்கும். இசை கலைஞர்களுக்கு அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் கிடைக்கப் பெறுவீர்கள். ஆறாமிடத்தில் எட்டிற்குரியவர் அமர்வதால் கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்பது போல உங்களின் கலை ஞானம் மேன்மை அடையும். எதிர்பாராத பாராட்டுகளும், பரிசுகளும் கிடைக்க பெறுவீர்கள். விரைய சனி காலம் என்பதால் சுப விரையமாக காலி மனை வாங்கி போடுவது. பிள்ளைகளுக்கு திருமணம் செய்தல், வீட்டு பராமரிப்பு பணிகளை செய்வது நல்லது. ஆன்மீக தேடலில் உங்களுக்கு பொக்கிஷம் போல சில அரிய பயிற்சிகள். அரிய நூல்கள் கிடைக்கப் பெறுவீர்கள். குழந்தை வேண்டுபவர்களுக்கு குழந்தை கிடைக்கும். புனித யாத்திரை செல்தல். முன்னோர் வழிபாடுகள் சிலருக்கு கிடைக்கும். ஆன்மீக விடயங்களை அறிந்து கொள்வீர்கள். பொருளாதாரத்தில் தேவைகள் பூர்த்தியாகும்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
மஞ்சள், சிவப்பு, வெண்மை.
அதிர்ஷ்ட திசைகள்:
வடக்கு, வடகிழக்கு, மேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
வியாழன், வெள்ளி, ஞாயிறு.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
21-10-2025 செவ்வாய் காலை 10.33 முதல் 23-10-2025 வியாழன் இரவு 10.01 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
செவ்வாய்க்கிழமை சுப்ரமணியருக்கு சிவப்பு பூ மாலையும், இலுப்பெண்ணெய் தீபமும் ஏற்றி வணங்கி வர சகல காரியமும் கைகூடும். தொழில் விருத்தி உண்டாகும்.
(கணித்தவர்: ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன்)















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM