எம்மில் பலரும் தங்களின் வாழ்வாதாரத்தில் ஈடுபட்டிருக்கும் தருணத்தில் வழக்கமாக வருகை தந்து கொண்டிருந்த வருவாயில் சேதம் ஏற்பட்டாலோ அல்லது தடை , தாமதம் ஏற்பட்டாலோ உடனடியாக மன உற்சாகத்தை இழந்து விடுகிறார்கள்.
மன அழுத்தம்- மன உளைச்சல் ஆகியவற்றுக்கும் ஆளாகி விடுகிறார்கள். இதனால் அவர்களுடைய வாழ்வாதாரத்தில் பாதிப்பு உண்டாகிறது. இந்தத் தருணத்தில் அவர்கள் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என கருதுவர். மாற்றத்தை உண்டாக்கிய பிறகும் அவர்களின் தொழிலில் லாபம் இல்லாத நிலையே தொடரும்.
இந்நிலையில் இவர்களால் நினைத்த காரியத்தை சாதிக்கவே இயலாது. இதனால் மனதளவில் சோர்வடைந்து விடுவர். இந்நிலையில் எம்முடைய முன்னோர்கள் நினைத்த காரியத்தில் வெற்றி பெறுவதற்கான சில சூட்சம வழிபாட்டினை முன்மொழிந்திருக்கிறார்கள்.
இதற்கு தேவையான பொருட்கள் : பச்சரிசி - வெல்லம் - உருளைக்கிழங்கு - கேரட் - தக்காளி.




வெள்ளிக்கிழமையன்று காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரையிலான சுக்கிர ஹோரை தருணத்தை தெரிவு செய்து கொள்ளுங்கள். அந்த தருணத்தில் மேலே விவரிக்கப்பட்ட பொருட்களை வாங்கி வைத்து, அதில் முதலில் பச்சரிசியையும் வெல்லத்தையும் கலந்திடுங்கள். அதனைத் தொடர்ந்து அதன் மீது உருளைக்கிழங்கு -கேரட்- தக்காளி- ஆகிய மூன்று காய்கறிகளையும் பிசைந்து கலந்திட வேண்டும்.
இந்த கலவையை உங்கள் வீட்டிற்கு வரவழைக்கப்பட்ட அல்லது பசுவும் கன்றும் இருக்கும் இடத்திற்கு நீங்கள் சென்று அந்த பசுவிற்கும், கன்றிற்கும் உணவாக அளித்திட வேண்டும். இதனை நீங்கள் தொடர்ந்து ஒன்பது வாரங்கள் மேற்கொண்டால் உங்களுடைய தன வருவாயில் மாற்றம் ஏற்பட்டு, ஏற்றம் உண்டாகி, மகிழ்ச்சியை அளித்து, சந்தோஷத்தை பரவச் செய்யும்.
தொகுப்பு : சுபயோக தாசன்















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM