வாழ்க்கை நடைமுறை, உணவு முறை ஆகியவற்றை மாற்றி அமைத்துக்கொண்டாலும் இன்றைய சூழலில் ஆயுள் முழுவதும் ஆரோக்கியமாக வாழ்வது என்பது சவால் மிக்கது தான். அதிலும் தற்போது வைத்திய சிகிச்சை முறை என்பது வைத்தியர்கள் கிளினிக்கல் டயகனைஸ் எனப்படும் நோயாளிகளிடம் கேள்வி கேட்டு பதிலை பெறுவதை விட இன்வெஸ்டிகேட் டயகனைஸ் எனப்படும் ஆய்வக பரிசோதனை அடிப்படையில் பாதிப்பினை அவதானித்து சிகிச்சை அளிப்பது இயல்பாகிவிட்டது.
இதன் காரணத்தினால் வைத்திய செலவு என்பது மும்மடங்கு உயர்ந்து விட்டது. இதன் காரணத்தினாலேயே அரசாங்க அனுசரணையுடன் இயங்கும் வைத்திய சாலையில் கட்டணமில்லாமல் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.
இந்நிலையில் எம்மில் பலரும் ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றுவது அதிகரித்து விட்டதாலும் நாம் பசியாறும் உணவு, காய்கறிகள் ஆகிய அனைத்தும் ரசாயனம் கலக்கப்பட்டதாக இருப்பதாலும் சுற்றுச்சூழல் மாசடைந்து இருப்பதாலும் விவரிக்க முடியாத பல நோய்களால் பாதிக்கப்படுவது அதிகரித்து விட்டது.
இந்நிலையில் ஆயுள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற எண்ணுபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. ஆனால் அதற்கான எளிமையான நடைமுறைக்கு சாத்தியப்பட்ட விடயங்களைத் தான் எதிர்பார்க்கிறார்கள். இதற்கு வைத்தியர்கள் அற்புதமான ஒரு செயல் திட்டத்தை வழங்கியிருக்கிறார்கள்.
அதுதான் நடை பயிற்சி நீங்கள் 80 வயது வரை அல்லது 90 வயது வரை ஆயுள் இருந்தாலும் ஆயுளின் இறுதிவரை ஆரோக்கியமாக - அடுத்தவர்களுக்கு சுமையாக இல்லாமல் வாழ வேண்டும் என விரும்பினால் நாளாந்தம் 12,000 அடிகள் நடைபயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இதனை ஆங்கிலத்தில் எளிமையாக 12,000 ஸ்டெப்ஸ் என குறிப்பிடுவார்கள்.
இந்த பரிந்துரையை கேட்ட தருணத்திலேயே எம்மில் பலரும் நாளாந்தம் இது சாத்தியமில்லை என தெரிவிப்பர். இவர்களுக்காக வைத்தியர்களின் அடுத்த கட்ட பரிந்துரை தான் குறைந்த பட்சம் நாளாந்தம் ஒன்பதாயிரம் அடிகளாவது நடக்க வேண்டும் என குறிப்பிடுகிறார்கள்.இந்த பயிற்சியை வாரத்திற்கு ஒரு முறையாவது மேற்கொள்பவர்கள் தங்களை ஒருபோதும் நாளாந்தம் பன்னிரண்டாயிரம் ஸ்டெப்ஸ் நடக்கும் நபர்களின் ஆரோக்கியத்துடன் ஒப்பிடக் கூடாது என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த இரண்டாம் கட்ட பரிந்துரையையும் எம்மில் பலர் இது சாத்தியமில்லை என்றே மனதில் நினைப்பர். இதற்கும் ஒரு மாற்று உபாயத்தை வைத்தியர்கள் முன்வைக்கிறார்கள். நாளாந்தம் குறைந்த பட்சம் ஏழாயிரம் அடிகள் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
இந்த 7000 ஸ்டெப்ஸ் என்பது உங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தற்காத்துக் கொள்வதற்கு மட்டும்தான். ஆனால் பருவநிலை மாற்றத்தின் காரணமாகவோ அல்லது வைரஸ், பாக்டீரியா போன்ற தொற்றின் காரணமாகவோ பாதிப்பு ஏற்படத்தான் செய்யும்.
பனிரெண்டாயிரம் அடிகள் நடைபயிற்சி மேற்கொண்டவர்களுக்கு முதுகு வலி, கால் வலி உள்ளிட்ட வலி தொந்தரவு இருக்காது. ஏனெனில் இவர்களுக்கு நடை பயிற்சி மேற்கொள்ளும் போது நோய் எதிர்ப்பு ஆற்றல் தூண்டப்பட்டு, எலும்பு மற்றும் தசைகளின் வலிமை மேம்படுத்தப்படுகிறது. அதனால் இவர்களால் தொடர்ந்து உற்சாகமாக இயங்க இயலும்.
அத்துடன் பனிரெண்டாயிரம் ஸ்டெப்ஸ் நடைபயிற்சியை மேற்கொள்பவர்கள் தங்களது திட்டத்தை அதிகாலையில் அதாவது ஐந்து மணிக்கு மேல் 7:00 மணிக்குள்ளாக தொடங்கி விடுவார்கள். இயற்கையோடு இணைந்த இந்தத் தருணத்தில் நீங்கள் நடைபயிற்சி மேற்கொள்வது ஆரோக்கியமானது என வைத்தியர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
எம்மில் சிலர் வீட்டில் நடைபயிற்சி மேற்கொள்வது உடற்பயிற்சி கூடத்தில் டிரெட் மில் எனும் கருவி மீது நின்று நடைபயிற்சி மேற்கொள்வது அலுவலகத்தில் மாடிப்படி ஏறி நடைப்பயிற்சி மேற்கொள்வது போன்றவற்றை நடைப்பயிற்சியின் கணக்கில் சேர்ப்பர். ஆனால் இதனால் கிடைக்கும் பலன்களை விட அதிகாலையில் இயற்கையோடு இணைந்த நிலவியல் பகுதியில் நீங்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் போது கிடைக்கும் புத்துணர்ச்சி, பலன்கள் அதிகம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
- வைத்தியர் வேணு,
தொகுப்பு - அனுஷா.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM