அமைச்சர் சமந்த வித்தியாரத்ன குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு!

09 Oct, 2025 | 04:48 PM
image

(எம்.மனோசித்ரா)

பாராளுமன்ற சிறப்புரிமைகளையும் சமூக வலைத்தளங்களையும் பயன்படுத்தி போலி செய்தியொன்று பரப்பப்படுகிறது. எனது மகன் தொடர்பில் தவறான செய்திகளை பகிர்ந்தவர்கள் அதனை நிரூபிக்க தவறினால் அவர்களுக்கெதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்தார்.

வியாழக்கிழமை (09) குற்றப்புலனாய்வுப்பிரிவில் இது குறித்து முறைப்பாடளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பாராளுமன்ற சிறப்புரிமைகளையும் சமூக வலைத்தளங்களையும் பயன்படுத்தி போலி செய்தியொன்று பரப்பப்படுகிறது. இது தொடர்பிலேயே குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளித்துள்ளோம். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இதனால் கலக்கமடைந்துள்ள எதிர்க்கட்சிகள் தற்போது ஆளுந்தரப்பிலுள்ளோரை தொடர்புபடுத்தி போலி செய்திகளை பரப்பிக் கொண்டிருக்கின்றன.

நாம் எதிர்க்கட்சியிலிருந்த போது ஆளுங்கட்சியை விமர்சித்திருக்கின்றோம். ஆனால் ஒருபோதும் அரசியல்வாதிகளின் பிள்ளைகளை இலக்கு வைக்கவில்லை. ஆனால் இன்று எமது பிள்ளைகளையும் இலக்கு வைத்து அவர்களையும் பழிவாங்க எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. அதற்காக பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்த போலி செய்திகள் சமூக வலைத்தளங்களிலும் பரவலாக பகிரப்படுகின்றன.

எனது மகன் பதுளை மத்திய மகா வித்தியாலயத்தில் கற்கின்றார். அவர் இன்னும் சாதாரண தர பரீட்சை கூட எழுதவில்லை. பாராளுமன்றத்தில் கூறப்பட்டதைப் போன்று ஒரு சம்பவம் இடம்பெற்றதா என்பதை பாடசாலை அதிபரிடம் கேட்டால் உண்மையை தெரிந்து கொள்ள முடியும். இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடளிக்க வேண்டாம் என்று அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. அது உண்மையெனில் பொலிஸாரிடம் அது குறித்து கேட்கலாம்.

இந்த போலி செய்தி எவ்வாறு உருவாக்கப்பட்டது, சமூக வலைத்தளங்களில் யாரால் பகிரப்பட்டது என்பது குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடளித்திருக்கின்றோம். இதனைக் கூறியவர்கள் உண்மையை உறுதிப்படுத்தாவிட்டால் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும். எதிர்கால சந்ததியினரை பாதிக்கும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு இனியும் இடமளிக்க முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடலோர காவல்படையினரால் கைப்பற்றப்பட்ட 1500 கிலோவிற்கும்...

2025-11-15 04:10:11
news-image

இலங்கை இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு...

2025-11-15 03:47:28
news-image

யாழில் கஞ்சா கலந்த மாவா மற்றும்...

2025-11-15 02:35:54
news-image

மட்டக்களப்பு வைத்தியசாலையில் கைபேசிகள் திருடிய இளைஞன்...

2025-11-14 23:00:58
news-image

பாராளுமன்றத்தில் தகாத வார்த்தைகள், குற்றச்சாட்டுகள் தவிர்க்கப்பட...

2025-11-14 15:50:45
news-image

எதிரணியை பெருந்தோட்ட மக்கள் கடுமையாக எதிர்க்க...

2025-11-14 17:02:07
news-image

323 சர்ச்சைக்குரிய கொள்கலன்களில் ஆயுதங்கள் இருந்தன...

2025-11-14 15:51:14
news-image

ஜனாதிபதியின் போதைப்பொருள் ஒழிப்பு செயற்றிட்டத்தக்கு ஆதரவு...

2025-11-14 17:04:27
news-image

வடக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு இந்த...

2025-11-14 15:52:06
news-image

பிரஜா சக்தி வறுமை ஒழிப்பு தேசிய...

2025-11-14 16:59:24
news-image

பெருந்தோட்ட மக்களுக்கு 200 ரூபா சம்பளத்தை...

2025-11-14 17:03:23
news-image

யாழில் விளையாட்டு வினையானது; குடும்பஸ்தர் உயிரிழப்பு!

2025-11-14 20:00:17