தமிழ் திரையுலகில் கதையின் நாயகியாக நடித்து வரும் நடிகை சோனியா அகர்வால் கதையை வழிநடத்திச் செல்லும் மைய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'வில்' எனும் திரைப்படம் - சொத்துள்ள மக்கள் சட்டபூர்வமாக எழுதி வைக்கும் உயில் தொடர்பான விவரங்களை விவரிக்கிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் எஸ். சிவராமன் இயக்கத்தில் உருவாகி உள்ள 'வில்' எனும் திரைப்படத்தில் சோனியா அகர்வால், விக்ராந்த் , அலீக்யா, பதம் வேணுகுமார் மோகன் ராமன், 'லொள்ளு சபா' சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டி. எஸ். பிரசன்னா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சௌரப் அகர்வால் இசையமைத்திருக்கிறார்.
நீதிமன்ற விசாரணையை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை ஃபுட் ஸ்டெப் புரொடக்ஷன் மற்றும் கோத்தாரி மெட்ராஸ் இன்டர்நேஷனல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
எதிர்வரும் பத்தாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் எஸ். சிவராமன், நடிகைகள் சோனியா அகர்வால் -அலீக்யா ஆகியோர் பங்கு பற்றினர்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,'' நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக பணியாற்றிய போது எதிர்கொண்ட உண்மையான வழக்கின் பின்னணியில் இப்படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது. ஒரு பெண்ணின் தியாகத்தை பேசும் படைப்பாகவும் உருவாக்கியுள்ளோம்'' என்றார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM