(எம்.மனோசித்ரா)
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மொழிப் பாடசாலைகளிலும் 2026 கல்வி ஆண்டுக்கான முதலாம் வகுப்பு ஜனவரி 20 ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2026ஆம் ஆண்டு கல்வி ஆண்டுக்கான முதலாம் வகுப்புகள் இலங்கையில் உள்ள அனைத்து சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் மொழிப் பாடசாலைகளிலும் 2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை அன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகும்.
அரச பாடசாலைகள், அரச அனுசரனை பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் தனியார் பாடசாலைகள் உட்பட அனைத்துப் பாடசாலைகளுக்கும் இந்த அறிவித்தல் பொருந்தும். தரம் 1 மாணவர்களுக்கான சேர்க்கை நடவடிக்கைகளை உத்தியோகபூர்வ வகுப்பு ஆரம்பிக்கும் திகதிக்கு முன்னர் பாடசாலைகள் நிறைவு செய்யப்பட வேண்டும்.
புதிய தரம் 1 மாணவர்களை வரவேற்கும் உத்தியோகபூர்வ விழாவில் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் உள்ளடக்கப்பட வேண்டும். அதற்கமைய தரம் 2 மாணவர்களால் வரவேற்பு, பெற்றோர்கள் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்களின் பங்கேற்பு, தேசிய மற்றும் பாடசாலைக் கொடிகளை ஏற்றி, அதனைத் தொடர்ந்து தேசிய மற்றும் பாடசாலை கீதங்களை இசைத்தல், ஆரம்பக் கல்விச் சீர்திருத்தங்களின் நோக்கங்கள் மற்றும் புதிய தரம் 1 பாடத்திட்டம் குறித்து பெற்றோருக்கு ஒரு அறிமுக அமர்வு என்பன அன்றைய தினத்தில் இடம்பெற வேண்டும்.
புதிய மாணவர்களை வரவேற்க ஆரம்பப் பிரிவினரால் ஏற்பாடு செய்யப்படும் எளிமையான மற்றும் மகிழ்ச்சியான நிகழ்ச்சியாக அது அமைய வேண்டும். இந்த நிகழ்வு புதிய மாணவர்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதுடன், குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் எவ்வித அசௌகரியமும் இன்றி சீராகவும் மகிழ்ச்சியாகவும் நடைபெறுவதை உறுதிசெய்ய வேண்டும். நிகழ்வின் வெற்றியை உறுதிசெய்ய, பாடசாலை அபிவிருத்திச் சங்கங்கள், பழைய மாணவர் சங்கங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரின் செயற்திறன் மிக்க பங்கேற்பையும் பெற்றுக்கொள்ளுமாறு பாடசாலைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM