வர்த்தக நிறுவனங்கள் கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் MAS நிறுவனத்துக்கு நான்கு சம்பியன் பட்டங்கள்

Published By: Digital Desk 3

09 Oct, 2025 | 03:03 PM
image

(நெவில் அன்தனி)

வென்னப்புவை சேர் அல்பர்ட் எப். பீரிஸ் விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்ற வர்த்தக நிறுவனங்களுக்கிடையிலான கரப்பந்தாட்ட சம்பயின்ஷிப் 2025இல் மாஸ் (MAS) ஹோல்டிங்ஸ் நிறுவனம் பிரதான சுப்பர் லீக் பிரிவு உட்பட நான்கு சம்பியன் பட்டங்களை சுவீகரித்து அசத்தியது.

இலங்கையின் முன்னணி வீரர்கள் இந்த சம்பியன்ஷப்பின் சுப்பர் லீக்கில் பங்குபற்றியதுடன், தேசிய விளையாட்டான கரப்பந்தாட்டத்தின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை அவர்கள் ஏற்படுத்தியிருந்தனர்.

இந்த வருடம் மாஸ் பெண்கள் அணியினர் தங்களது மேலாதிக்கத்தை நிலைநாட்டி சுப்பர் லீக், சம்பியன்ஷிப் மற்றும் மாஸ்டர்ஸ் ஆகிய மூன்று பிரிவுகளிலும் சம்பியன் பட்டங்களை சூடி வரலாறு படைத்தனர்.

அத்துடன் ஆண்களுக்கான ஏ பிரிவிலும் மாஸ் அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது;

பெண்களுக்கான சுப்பர் லீக் பிரிவு இறுதிப் போட்டியில், ஹைத்ராமணி அணியை 25-22, 25-14,  25-16 என்ற புள்ளிகளைக் கொண்ட 3 நேர் செட்களில் மாஸ் இன்டிமேட்ஸ் கேஷுவல்லைன் அணி வெற்றிகொண்டு சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

பெண்களுக்கான சம்பியன்ஷிப் பிரிவில் இறுதிப் போட்டியில் ஒமேகா லைன் அணியை 25-18, 25-15, 25-19 என்ற புள்ளிகளைக் கொண்ட 3 நேர் செட்களில்  மாஸ் இன்டிமேட்ஸ் கேஷுவல்லைன் அணி வெற்றிகொண்டு சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

பெண்களுக்கான மாஸ்டர்ஸ் பிரிவு இறுதிப் போட்டியில் மெலிபன் அணியை  25-09, 25-14 என்ற புள்ளிகளைக் கொண்ட 2 நேர் செட்களில் வெற்றிகொண்டு மாஸ் இன்டிமெட்ஸ் கேஷுவல்லைன் அணி சம்பியனானது.

விறுவிறுப்பாக நடைபெற்ற ஆண்களுக்கான 'ஏ' பிரிவு இறுதிப் போட்டியில், பிரண்டிக்ஸ் அணியிடம் முதல் செட்டில் தோல்வி அடைந்த மாஸ் யூனிச்சேலா அணி அடுத்த இரண்டு செட்களில் வெற்றிபெற்று 2 - 1 என்ற செட்கள் வித்தியாசத்தில் சம்பயின் பட்டத்தை தனதாக்கிக்கொண்டது.

சுப்பர் லீக் - பெண்கள் பிரிவு:   தனிநபர் விருதுகள்

சிறந்த வீராங்கனை - டபிள்யூ.ஏ.எஸ். மதுவன்தி - கெஷுவல்லைன்

சிறந்த ஸ்பைக்கர் - கே.டி. வாசனா - கெஷுவல்லைன்

சிறந்த செட்டர் - எச்.எம்.டி.எம். ஹேரத் - கெஷுவல்லைன்

சிறந்த பிளாக்கர் - கே.பி.எஸ். செவ்வன்தி - கெஷுவல்லைன்

சிறந்த சர்வர் - டபிள்யூ.ஏ.எஸ். மதுவன்தி - கெஷுவல்லைன்

சிறந்த லிபரோ - டபிள்யூ.எச்.எச்.ஏ.டி. சஞ்சீவனி - கெஷுவல்லைன்

சம்பியன்ஷிப் - பெண்கள் பிரிவு: தனிநபர் விருதுகள்

சிறந்த வீராங்கனை - பி.எச்.பி. திசாநாயக்க -  கெஷுவல்லைன்

சிறந்த ஸ்பைக்கர் - ஆர்.எம்.பி. உத்தரா -  கெஷுவல்லைன்

சிறந்த செட்டர் - எம்.டி.சி.ஐ. சிவன்திகா - கெஷுவல்லைன்

மாஸ்டர்ஸ் ;பிரிவில்   மாஸ்   கெஷுவல்லைன்   அணியின் ரேணுகா நில்மினி சிறந்த வீராங்கனை மற்றும் சிறந்த தாக்குதல் வீராங்கனை விருதுகளையும், நயனா ஜயரட்ன சிறந்த பந்து பரிமாற்ற வீராங்கனை விருதையும் வென்றனர்.

ஆண்களுக்கான  ஏ பிரிவில்  மாஸ்   கெஷுவல்லைன்   அணியின்   எஸ்.எச். இசுரு சிறந்த தாக்குதல் வீரர் விருதையும், ஆர்.ஏ.ஏ. மலிந்த சிறந்த பந்து பரிமாற்ற வீரர் விருதையும் தட்டிச் சென்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹொங்கொங் சிக்சஸ் கோப்பைப் பிரிவில் ஹொங்கொங்...

2025-11-10 12:38:02
news-image

ஹொங்கொங் சிக்சஸ் கிரிக்கெட்டில் பிரதான கிண்ணப்...

2025-11-10 11:44:35
news-image

லைவ்போய் கிண்ணத்துக்கான 20 வயதின்கீழ் கால்பந்தாட்ட...

2025-11-08 04:10:15
news-image

ஹொங்கொங் சிக்சஸ் நடப்பு சம்பியன் இலங்கை...

2025-11-08 04:05:24
news-image

இலங்கையின் ரி20 அணிக்கு உப தலைவராக...

2025-11-08 03:59:56
news-image

மத்திய ஆசிய 19 வயதுக்குட்பட்ட பெண்கள்...

2025-11-07 23:23:32
news-image

ஹொங்கொங் சிக்சஸில் சம்பியன் பட்டத்தை தக்கவைக்கும்...

2025-11-06 19:26:24
news-image

லைவ்போய் கிண்ண கால்பந்தாட்ட அரை இறுதிகளில்...

2025-11-06 17:30:20
news-image

மத்திய ஆசிய 19 வயதுக்குட்பட்ட பெண்கள்...

2025-11-06 13:46:09
news-image

மகளிர் பிறீமியர் லீக் 2026 :...

2025-11-06 13:26:50
news-image

20 வயதின் கீழ் லைவ்போய் கிண்ண...

2025-11-05 15:39:50
news-image

20 வயதின் கீழ் லைவ்போய் கிண்ண...

2025-11-05 13:59:12