இந்திய பிரதமர் நரேந்திர மோடியை பிரித்தானிய பிரதமர் கேர் ஸ்டார்மர் மும்பையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
பிரித்தானிய பிரதமராக பதவியேற்ற பின்னர், முதல் முறையாக இந்தியாவுக்கு புதன்கிழமை (08) கேர் ஸ்டார்மர் சென்றடைந்தார்.
அவர், மஹாராஷ்டிராவின் மும்பையில் இருந்து தன் உத்தியோகபூர்வ பயணத்தை ஆரம்பித்துள்ளார். அவருடன் பிரித்தானியாவைச் சேர்ந்த தொழிலதிபர்கள், தொழில்முனைவோர்கள், பல்கலை., துணை பேராசிரியர்கள் என 125 பேர் அடங்கிய குழுவினரும் சென்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று வியாழக்கிழமை (09) மும்பையில் பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மரை பிரதமர் மோடி சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மருடன் இந்திய பிரதமர் மோடி கலந்துரையாடியுள்ளார்.
இரு நாட்டு தலைவர்களும் வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்ப பரிமாற்றம் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளனர். இருநாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM