ஆப்கானிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இந்தியாவுக்கு விஜயம்

Published By: Digital Desk 3

09 Oct, 2025 | 03:27 PM
image

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலீபான் அரசின் வெளிவிவகார அமைச்சர் அமீர் கான் முத்தகி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இதற்காக அவர் இன்று வியாழக்கிழமை (09) புறப்பட்டுள்ளார். அவருடைய இந்த பயணத்தில், இந்திய மத்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பிற அதிகாரிகளை நேரில் சந்தித்து கலந்துரையாவுள்ளார்.

இதில், அரசியல், பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்கள் பற்றி பேசப்படும் என அந்நாட்டு இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட தகவல் தெரிவிக்கின்றது. 2021-ம் ஆண்டு ஆட்சி அதிகாரங்களை தலீபான் அமைப்பு கைப்பற்றிய பின்னர் தலீபான் அரசை முறைப்படி ரஷியா மட்டுமே அங்கீகரித்து உள்ளது.

இதனை தொடர்ந்து பல்வேறு நாடுகளுடனான உறவை விரிவுபடுத்துவதற்கான முயற்சியாக அவருடைய இந்த பயணம் அமையும். இந்த பயணத்தில் இருதரப்பு ஒத்துழைப்பு, வர்த்தக பரிமாற்றங்கள், உலர் பழ ஏற்றுமதிகள், சுகாதார துறை, தூதரக சேவைகள் மற்றும் பல்வேறு துறைமுகங்கள் உள்ளிட்டவை பற்றியும் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான யோங்கிங்...

2025-11-14 18:01:55
news-image

இந்தியா - கர்நாடகாவில் பெண் பணியாளர்களுக்கு...

2025-11-14 14:02:26
news-image

அமெரிக்காவில் 43 நாள் நீடித்த அரசு...

2025-11-13 17:56:17
news-image

“உங்களுக்கு எத்தனை மனைவிகள்?” - சிரியா...

2025-11-13 16:09:16
news-image

டெல்லியில் நடந்தது ஒரு தெளிவான பயங்கரவாத...

2025-11-13 13:41:46
news-image

கானாவில் இராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு - சன...

2025-11-13 16:05:49
news-image

சைப்ரஸில் நிலநடுக்கம் 

2025-11-12 17:26:28
news-image

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில்...

2025-11-12 16:09:57
news-image

அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை...

2025-11-12 16:06:26
news-image

தென்சீனாவில் சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்ட...

2025-11-12 14:32:17
news-image

இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் -...

2025-11-12 12:17:16
news-image

எகிப்தில் சுற்றுலா பஸ் மீது லொறி...

2025-11-12 11:43:56